For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணவிலும் ஜாதி சாயம்.. இந்து அல்லாதவரிடம் உணவு டெலிவரி.. சொமாட்டோவுடன் மல்லுக்கட்டிய மதவாதி!

Google Oneindia Tamil News

போபால்: இந்து அல்லாத ஒருவரிடம் இருந்து எனக்கு உணவு டெலிவரி வேண்டாம் என்ற வாடிக்கையாளருக்கு உணவுக்கு மதம் இல்லை என சொமாட்டோ அதிரடி பதில் கொடுத்துள்ளது.

வீட்டில் இருந்த படியே தேவையான உணவுகளை, தேவையான உணவகத்தில் அதுவும் வீட்டுக்கே கொண்டு சேர்க்க ஸ்விக்கி, சொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் ஆகிய செயலிகள் உள்ளன. இந்த செயலிகளில் உள்ள நிறுவனங்களுடன் குறிப்பிட்ட ஹோட்டல்கள் டை அப் வைத்திருக்கும்.

Client cancelled a food order for being delivered from Muslim

இந்த செயலிகள் மூலம் ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்துவிட்டு பணத்தையும் செலுத்திவிட்டால் போதும் ஹோட்டலில் ஆர்டர் பெறுவது முதல் உணவு வீட்டுக் கதவை தட்டும் வரை அனைத்தும் ஆன்லைனில் வாடிக்கையாளருக்கு காட்டி விடும்.

அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் அமித் என்பவர் சொமாட்டோவில் உணவை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் உணவு தயார் செய்யப்பட்டு அது ஃபையாஸ் என்பவர் கொண்டு வருகிறார் என அமித்துக்கு மெசேஜ் வந்தது. இதனால் அமித் கடுப்பாகினார்.

அப்போது சொமாட்டோவின் வாடிக்கையாளர் மையத்தில், உணவை முஸ்லிம் அல்லாத வேறு ஒருவரிடம் கொடுத்தனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முடியாது என கூறிவிட்டு என்னுடைய ஆர்டர் ஹிஸ்ட்ரியை பிளாக் செய்தனர். இதையடுத்து நான் உணவை கேன்சல் செய்யுமாறு கூறினேன்.

அவர்கள் ஆர்டரை கேன்சல் செய்தால் பணத்தை திரும்பி கொடுக்க மாட்டோம் என்றனர். இதுகுறித்து அமித் டுவிட்டரில் புகார் கொடுத்தார். இதற்கு பதில் அளித்த சொமாட்டோ நிறுவனம், உணவுக்கு மதம் இல்லை என்று பதில் அளித்துள்ளது. வாடிக்கையாளர் அமித்தின் செயலுக்கு டுவிட்டரில் கண்டனங்கள் குவிகின்றன.

English summary
Zomato replies food has no religion for customer who cancels his order for being food delivered from Muslim boy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X