For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேக வெடிப்பு அமர்நாத் கோவில் அருகே வானம் பொத்துக்கொண்டு கொட்டிய மழையால் 22 பேர் பலி

மேகவெடிப்பு பெருமழை காரணமாக அமர்நாத் கோவில் அருகே ஏற்பட்ட பெறுவெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புதன்கிழமையன்று ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேச மாநிலங்களில் 3 இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித் தீர்த்தது. பெருவெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அமர்நாத் கோவில் அருகே ஒரு மணி நேரத்தில் 10 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கினாலும் ஜூலை 15ஆம் தேதிக்குப் பிறகே வட இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்தது. மகாராஷ்டிராவில் பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Cloudburst near Amarnath shrine in Jammu and Kashmir

அதே போல ஹிமாசலபிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஆங்காங்கே மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் பெருக்கெடுத்து பலரது உயிரை காவு வாங்கி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தர்மசாலாவில் மேக வெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டித்தீர்த்தது. இதில் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பலர் உயிரிழந்தனர்.

புதன்கிழமையன்று ஜம்மு-காஷ்மீரில் குலாப்கர் பகுதியில் உள்ள கிஷ்த்வார் அருகே உள்ள ஹொன்சார் கிராமத்தில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித்தீர்த்தது. பெரு மழை வெள்ளத்தினால் அந்த கிராமத்தில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. பலர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஒன்னு பாகிஸ்தானுடன் சேருங்க.. இல்லைன்னா தனி நாடுதான்..' காஷ்மீர் பற்றி இம்ரான் கான் சர்ச்சை பேச்சு'ஒன்னு பாகிஸ்தானுடன் சேருங்க.. இல்லைன்னா தனி நாடுதான்..' காஷ்மீர் பற்றி இம்ரான் கான் சர்ச்சை பேச்சு

இதே போல ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் பிற்பகலில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித்தீர்த்தது. இதில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள புனித தலமான அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு ஏற்பட்டு திடீரென மழை கொட்டியது. இதன் காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அமர்நாத் குகை அருகே அமைக்கப்பட்டிருந்த இரண்டு கூடாரங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

ஒரு மணிநேரத்தில் 10 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. பெருமழை வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் கதி என்னவானது என்பது பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை.இந்த சம்பவத்தில் புனித குகைக்கு பாதிப்பு ஏதுவும் ஏற்படவில்லை என்று என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

English summary
Heavy rains lashed three places in Jammu and Kashmir and Himachal Pradesh on Wednesday as the southwest monsoon intensified in the country. More than 20 people have been killed in floods. Many are enchanted. Near the Amarnath temple, it rained up to 10 cm in an hour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X