For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா.. ஒடிசாவுக்கு ரூ .289.42 கோடி நிதி பேக்கேஜ்.. ஒப்புதல் கொடுத்த நவீன் பட்நாயக்

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிசாவில் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக சிறு மற்றும் குறு தொழில்கள் மேம்பாட்டுக்காக, ரூ .289.42 கோடி நிதி பேக்கேஜை முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்து ஒப்புதல் அளித்துள்ளார்.

வட்டி குறைப்பு, மானியத்திற்கான டாப்-அப், மாநில ஜிஎஸ்டியை திருப்பிச் செலுத்துதல் மற்றும் வருடாந்திர நிறுவன பராமரிப்பு கட்டணங்களை தள்ளுபடி செய்தல் போன்ற பல உதவி நடவடிக்கைகளுக்கு, இந்த நிதி பயன்படும்.

CM Announces Rs.289.42 Crore Package For MSMEs To Combat Covid Pandemic

இந்த ஏற்பாட்டின் படி, அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் கீழ், சிறு குறு தொழில்களுக்கு ஒரு வருட கால அவகாசத்துடன் அரசு வட்டி வழங்கலை வழங்கும்.

சிறு தொழில் நடத்தும் தகுதியான பெண்களில் 40 சதவீதம் பேருக்காவது, பயன் கொடுக்கும் நோக்கில் 108.29 கோடி ரூபாய் வெளியிடப்படுகிறது.
2020-21 நிதியாண்டிற்கான பி.எம்.இ.ஜி.பியின் கீழ், ஏழை பிரிவினருக்கான டாப்-அப் மானியம் 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தேவையைப் பூர்த்தி செய்ய ரூ .27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பின்தங்கிய பிரிவுக்கு (எஸ்சி / எஸ்டி / ஓபிசி / சிறுபான்மை சமூகம் / பெண்கள் /மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் படைவீரர்கள்) இது ஒரு பெரிய வழியில் உதவும்.

பிஎம்எப்எம்இ திட்டத்தின்கீழ் செயல்படும் உணவு பதப்படுத்துதல் திட்டத்தின்கீழ், 60க்கு 40 என்ற வகையில் மத்திய மாநில அரசுகள் சார்பில் செலவிடப்படுகிறது. தற்போதைய நிதியாண்டில், 1000 யூனிட் டாப்அப் செய்யப்படும். இந்த மானியமாக ரூ.10 கோடி வழங்கப்படும்.

பஞ்சாயத்து ராஜ் துறையின்கீழ், கொரோனா உதவி பேக்கேஜ் துவங்கப்பட்டது. பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம், ரூ.100 கோடி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

2017ம் ஆண்டு ஜூலை 1 முதல் 2020ம் ஆண்டு மார்ச் 31 வரையில் 175 நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பணத்தை ஈட்டிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.38.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முழு தொகுப்புகளும் கொரோனா தொடர்பான இழப்பை எதிர்கொள்ள எம்.எஸ்.எம்.இ.க்களின் நலனுக்காக ரூ .289.42 கோடியை வழங்குகின்றன.

English summary
Chief Minister Shri Naveen Patnaik has approved a package of Rs.289.42 Crore for the benefit of MSMEs in order to combat the pandemic situation in the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X