For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

14-ஆவது நிதி கமிஷன் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 6000 கோடி இழப்பு.. முதல்வர்

14-ஆவது நிதி கமிஷன் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 6000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: 14-ஆவது நிதி கமிஷன் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

டெல்லி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மத்திய அரசின் வரிக் கொள்கையை மாற்ற வேண்டும்.

CM Edappadi palanisamy says that TN gets Rs 6000 crore loss because of 14th Finance commission

தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை பங்கிடுவதில் மத்திய அரசு உதவ வேண்டும். மாநிலங்கள் பாதிக்காத வகையில் 15ஆவது நிதிக் குழுவில் உள்ள விதிகளில் திருத்தம் தேவைப்படுகிறது. நிதி இழப்பை தவிர்க்க 2011 மக்கள் தொகையை அடிப்படையாக கொள்ள கூடாது.

14-வது நிதி கமிஷன் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆணையம் தனது பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பின்பற்றப்பட வேண்டும்

மகாநதி, காவிரி, கோதாவரி, குண்டாறு, பாலாறு, வைகை ஆகியவற்றை இணைக்க வேண்டும். நதிகள் இணைப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நதிகள் இணைப்பு மூலம் உபரி நீர் வீணாவதை தடுக்க முடியும் என்றார் முதல்வர்.

English summary
CM Edappadi Palanisamy speaks in Niti Aayog meeting that TN faces Rs. 6000 crore every year because of 14th Finance commission recommendation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X