For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பன்றிக்கு பயந்து வானத்தில் வட்டமடித்த மத்திய பிரதேச முதல்வர்!

ஹெலிகாப்டர் தரை இறங்கும் நேரத்தில் பன்றி உள்ளே புகுந்ததால், தரை இறங்காமல் நீண்டநேரம் ஹெலிகாப்டரிலேயே, மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் வட்டமடித்துள்ளார். இது அம்மாநிலத்தில் பரபரப்பை

By Devarajan
Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் ஹெலிகாப்டர் தரை இறங்கும் போது, அந்தப்பகுதிக்குள் பன்றி ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நேரம், முதல்வரின் பாதுகாப்பு போலீசார் பன்றியை போராடி விரட்டினர். பின்னர் முதல்வர் ஹெலிகாப்ட்டர் தரையிறங்கியது. இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பு நிலவியது.

 CM Helicopter unable to land due to Pig enter into Helipad

மத்திய பிரதேச மாநிலம், சாத்னா மாவட்டம் பிர்சிங்பூரில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருந்தது. அப்போது விழா நடக்கும் இடத்தில், ஹெலிகாப்டர் இறங்க அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் திடீரென பன்றி ஒன்று நுழைந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பரப்பாகினர். பன்றியை எப்படி விரட்டுவது என்று தெரியாமல் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விழித்தனர்.

ஆனால் பன்றி ஜாலியாக, அந்தப்பகுதியைச் சுற்றிவந்தது. ஹெலிகாப்ட்டர் தரை இறங்கும் இடத்திற்கு அருகிலேயே பன்றி சுற்றியதால், முதல்வர் தர இறங்குவதில் பெரும் சிக்கல் சிக்கல் ஏற்பட்டது. கொஞ்ச நேரம் முதல்வரின் ஹெலிகாப்டர், வானிலேயே வட்டமடித்தது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பன்றியை விரட்டியபிறகு, ஹெலிகாப்ட்டர் பத்திரமாக தரையிறங்கியது.

பின்னர் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் பங்கேற்ற விழா தாமதாமாக தொடங்கி நடந்தது. இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Madhya Pradesh CM Shivraj Singh Chouhan's Helicopter unable to land due to Pig enter into Helipad at Satna district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X