For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தைப் போல் ஆந்திராவில் சூப்பர் மாற்றம்.. பூரிப்பில் ஜெகன் மோகன் ரெட்டி!

Google Oneindia Tamil News

அமராவதி: தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளே இதற்கு காரணம் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மகிழ்ச்சியில் உள்ளார்.

ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தினார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அத்துடன் பள்ளிகளை தரம் உயர்த்தினார். நிறைய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக இந்த ஆண்டு லட்சக்கணக்கான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது ஒருபுறம் எனில் கொரோனாவால் ஏற்பட்ட வறுமையும் ஏராளமான மாணவர்களை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர வைத்துள்ளது.

கல்யாணம் ஆயிருச்சா? இதை பாருங்க.. மாத வருமானத்தை சொல்ல மறுத்த கணவன்.. மனைவி அதிரடி முடிவு!கல்யாணம் ஆயிருச்சா? இதை பாருங்க.. மாத வருமானத்தை சொல்ல மறுத்த கணவன்.. மனைவி அதிரடி முடிவு!

அரசு பள்ளிக்கு மாற்றம்

அரசு பள்ளிக்கு மாற்றம்

தமிழகத்தை போல் ஆந்திராவிலும் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆந்திர முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்திய கல்வி சீர்திருத்தங்களுக்குப் பிறகு மொத்தம் 2.68 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறி உள்ளனர்.

கடந்தாண்டை விட அதிகம்

கடந்தாண்டை விட அதிகம்

ஆந்திராவில் இந்த ஆண்டு, அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 42.46 லட்சம் ஆகும். இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் சேர்ந்தததை விட 2.68 லட்சம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 39.78 லட்சம் ஆகும்.

தனியார் பள்ளிகளில் ஆர்வம்

தனியார் பள்ளிகளில் ஆர்வம்

அரசு பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிகளைப் போலவே நிலைநிறுத்த பல நடவடிக்கை எடுத்து வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. முந்தைய அரசாங்கத்தின் முக்கிய உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் அலட்சியம் ஆகியவை ஆந்திர மாநிலத்தில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் அல்லது உதவி பெறும் நிறுவனங்களை விட தனியார் பள்ளிகளை விரும்புவதை பல ஆண்டுகளாக விரும்பினார்கள்.

நல்ல மாற்றம்

நல்ல மாற்றம்

தற்போதைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு, 2019 மே மாதம் பொறுப்பேற்றதிலிருந்து, மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தங்களால் மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வித் தரத்தை உயர்த்தியதால் இத்தகைய மாற்றம் ஏறபட்டுள்ளது. மாணவர் சேர்க்கை புள்ளி விவரங்கள் அரசின் சரியான முடிவுகள் நல்ல மாற்றத்தை உருவாக்கியதை வெளிப்படுத்துகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.

English summary
As reported by the Andhra Pradesh Chief Minister’s Office, a total of 2.68 lakh students have opted to take a transfer from private schools to government schools after the educational reforms introduced by the Andhra Pradesh Chief Minister YS Jaganmohan Reddy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X