For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

CMC orders Karnataka to release water to TN
டெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட காவிரி கண்காணிப்புக்குழு உத்தரவிட்டுள்ளது.

காவிரி கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், ஐந்து மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் நடைபெற்றது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில், தலைமை செயலர் ஷீலா கலந்து கொண்டார்.

நடுவர் மன்ற உத்தரவை காவிரி மேலாண்மை வாரியம் செயல்படுத்தவில்லை என்று தமிழகம் புகார் தெரிவித்தது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 15 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கார்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழகம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. மேலும், டிசம்பர் மாதம் 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரி மாதம் 3 டி.எம்.சி. தண்ணீரும் திறக்க தமிழகம் கோரிக்கை விடுத்தது.

இதனை ஏற்று காவிரி கண்காணிப்புகுழு கூட்ட தலைவர் மற்றும் நீர்வளத்துறை செயலரான அலோக் தமிகழத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார்.

English summary
Cauvery monitoring committee has ordered the state of Karnataka to release water to TN
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X