For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: பிரதமரின் ஆலோசகர் நாயரிடம் சிபிஐ விசாரணை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

நிலக்கரித்துறை அமைச்சர் பொறுப்பை 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரை பிரதமர் மன்மோகன்சிங் வகித்தபோது அவரது முதன்மைச் செயலாளராக இருந்தவர் டி.கே.ஏ.நாயர்.

Coal blocks allocation scam: CBI questions key PM advisor TKA Nair

தற்போது பிரதமரின் ஆலோசகராகவும் நாயர் இருப்பதால் அவரிடம் நேரில் விசாரணை நடத்தாமல் கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பி சி.பி.ஐ அதிகாரிகள் பதிலை பெற்றுள்ளனர்.

2006 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள், அதற்கான கொள்கைகள் பற்றி டி.கே.ஏ. நாயரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக டி.கே.ஏ.நாயர் அளித்த பதில்களை, அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது.

English summary
The CBI has quietly completed the questioning of T K A Nair, a key advisor of Prime Minister Manmohan Singh and his former principal secretary, in connection with the coal blocks allotment scandal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X