For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலக்கரி சுரங்க ஊழல்: மமதா உட்பட 3 முதல்வர்களிடம் விசாரணை நடத்துகிறது சிபிஐ

By Mathi
Google Oneindia Tamil News

Mamata Banerjee
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உட்பட 3 மாநில முதல்வர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் அதிகம் அடிபட்டது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெயர்தான். அவரைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் ஆகியோரிடம் தற்போது விசாரணை நடத்தவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்கள் மட்டுமின்றி முன்னாள் முதல்வர்களிடமும் விசாரணை நடத்தவும் சிபிஐ முடிவு செய்துள்ளது.

அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும் 29ந் தேதி விசாரணைக்கு வருவதற்கு முன்பு தனியார் நிறுவனங்கள் மீது மேலும் பல புதிய வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
After Odisha Chief Minister Naveen Patnaik, it could well be the turn of the CMs of Chhattisgarh, West Bengal and Jharkhand to come under the CBI scanner in the ‘Coal-gate' scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X