For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலக்கரி சுரங்க ஊழல்: பி.சி. பரேக்குக்கு சிபிஐ சம்மன்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக நிலக்கரி துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

Coalgate: CBI summons former Coal Secretary P.C. Parakh

ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஒடிஷாவில் உள்ள ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கடந்த ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த நிறுவனத்திற்கு தமது பதவியை தவறாகப் பயன்படுத்தி, நிலக்கரி சுரங்கங்களை அப்போதைய நிலக்கரித்துறை செயலர் பி.சி.பரேக் ஒதுக்கீடு செய்ததாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக அவர் மீதும் நிலக்கரித்துறை அமைச்சகம் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விசாரணைக்கு வரும் 25-ந் தேதி ஆஜராகுமாறு பி.சி.பரேக்கிற்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளனர்.

அண்மையில் பிரதமர் மன்மோகன்சிங்கை விமர்சித்து பி.சி. பரேக் புத்தகம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The CBI on Tuesday summoned former Coal Secretary P.C. Parakh for questioning on April 25, 2014 in connection with a case for alleged abuse of official position in granting a coal block in Odisha to Aditya Birla Group company Hindalco.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X