For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலக்கரி சுரங்க ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியது நீதிமன்றம்!

By Mathi
Google Oneindia Tamil News

Coalgate: Court returns CBI's chargesheet
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தனிநீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் கொல்கத்தாவைச் சேர்ந்த வினி அயர்ன் மற்றும் ஸ்டீல் உத்யோக் நிறுவனத்துக்கு ஜார்கண்டில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியது தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. நேற்று தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதை ஆய்வு செய்த தனி நீதிமன்ற நீதிபதி பாரத் பரசார், இறுதி விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த 8 பேரில் 4 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது பற்றியும், அதற்கான காரணங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சி.பி.ஐ. தரப்பில் சரியான விளக்கம் அளிக்கப்படாததால், குற்றப்பத்திரிகையை நீதிபதி திருப்பி அனுப்பினார்.

English summary
In a setback to CBI's probe in the coal blocks allocation scam cases, a special court has "returned" its charge sheet in a case involving a Kolkata-based company, saying it has failed to give any plausible explanation on its queries and reasons for dropping four accused from it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X