For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவசரப்பட்டுட்டீங்களே.. போராடியிருக்கலாம் சித்தார்த்தா.. மோசமானவர்கள் எல்லாம் நல்லா இருக்காங்களே!

விஜி சித்தார்த்தாவின் தற்கொலை சிறு வியாபாரிகளுக்கு கலக்கம் வந்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    கஃபே காபிடே நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு-Cafe Coffee Day, V G Siddhartha's body found

    சென்னை: சித்தார்த்தா ரொம்பவும் நேர்மையானவர் போல.. அதனாலதான் இப்படி ஒரு முடிவை எடுத்துட்டார்.. இவரது இந்த முடிவு பல்வேறு விதமான தாக்கங்களை சிறுதொழில் செய்யும் வணிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டு போயுள்ளது.

    சித்தார்த்தாவுக்கு என்ன குறைச்சல்.. நல்ல வசதி, நல்ல சொத்து, மிக திறமையானவர், கடினமான உழைப்பாளி.. தன் குடும்பத் தொழிலான, காபி கொட்டை ஏற்றுமதியைதான் இவரும் கையில் எடுத்தார்.

    50 ஆயிரம் பேருக்கு வேலையை தந்தவர்.. நாடு முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் உள்ளன.. எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன்.. இவ்வளவு இருந்தும் சித்தார்த்தா ஏன் இப்படி முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் நாட்டு மக்கள் அதிர்ச்சியாக கேட்கிறார்கள்.

    ஊழியர்களுக்கான கடிதத்தில் உள்ளது வேறு.. சித்தார்த்தா கையெழுத்து மாறுபடுகிறது.. வருமான வரித்துறைஊழியர்களுக்கான கடிதத்தில் உள்ளது வேறு.. சித்தார்த்தா கையெழுத்து மாறுபடுகிறது.. வருமான வரித்துறை

    சறுக்கல்கள்

    சறுக்கல்கள்

    பிசினஸ் என்று எடுத்து கொண்டால் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள், கடன்கள் வருவது இயல்பு என்பதை இத்தனை வருடங்களாகவே உச்சத்தில் இருந்த சித்தார்த்தா புரிந்து கொள்ளாதது ஆச்சரியம்தான். ஆரம்பத்தில் இருந்தே லாபத்தையும், தொழில் பெருக்கத்தையும் பார்த்தவருக்கு சிறு சறுக்கலை ஏற்று கொள்ள முடியாத அளவுக்கு மனோபாவம் இருப்பது அதிர்ச்சியாகவும் உள்ளது.

    நஷ்டம்

    நஷ்டம்

    உயிரோடு இருந்து பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறனை அவருக்கு சுற்றி இருந்தவர்கள் தர தவறி விட்டதும் தெரிகிறது. கடன் வந்துவிட்டால், அதை அடைக்க நிறைய முயற்சி செய்திருக்கலாம், அல்லது இருக்கிற சொத்தை விற்று கடனை அடைத்திருக்கலாம். அம்பானிக்கும்தான் நஷ்டம் என்று சொன்னார்கள்.. மீளவில்லையா? அல்லது கோடி கோடியாய் கடனை வாங்கி கொண்டு ஒருத்தர் லண்டனில் சுகபோக வாழ்வு வாழவில்லையா?

    பலவீனம்

    பலவீனம்

    சித்தார்த்தின் தற்கொலை 2 விஷயங்களை உணர்த்திவிட்டு போயுள்ளது. ஆனானப்பட்ட சித்தார்த்தே இப்படி ஒரு முடிவை எடுத்ததால், சிறு, குறு தொழிலை நடத்தி வரும் பிசினஸ்வாதிகளின் மனநிலைமை மிகவும் பலவீனமாகும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.. தொழிலில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் தைரியத்தையும் சித்தார்த்தின் தற்கொலை துடைத்து கொண்டு போய்விடும்படி ஆகிவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும்.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    மற்றொன்று, தன்மானப் பிரச்சனையாக இந்த விஷயத்தை சித்தார்த் கையாண்டுவிட்டார். அதனால்தான் பேர், புகழ், செல்வாக்கு, என்று எத்தனையோ நல்லவைகள் கூட இருந்தாலும் கோழைத்தனம் என்ற ஒன்ற ஒற்றை வார்த்தையையும் பதிய விட்டு போய்விட்டார். சித்தார்த்தா என்ற தனிப்பட்ட நபர் மீது ஆயிரம் விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர் புண்ணியத்தால் 50 ஆயிரம் குடும்பங்கள் பிழைத்து கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

    தவறிய சித்தார்த்தா

    தவறிய சித்தார்த்தா

    இன்னும் கொஞ்சம் போராடியிருக்கலாம்.. போராடி வென்றிருக்க வேண்டும்.. விஜய் மல்லையா போன்றவர்களே சந்தோஷமாக இருக்கும்போது.. சித்தார்த்தா எடுத்த முடிவு தவறானது.. தைரியமாக அவர் போராடி அதில் வென்றிருந்தால்.. பல்லாயிரம் இளைஞர்களுக்கு அவர் இன்னும் ஊக்கம் கொடுத்திருக்க உதவியிருக்கும்.. அதை தவற விட்டு விட்டார் சித்தார்த்தா.

    English summary
    The most demanded is that Coffee Day VG Siddharthas should have recovered from the debt problems
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X