For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடமாநிலங்களை வதைக்கும் கடும் பனிப்பொழிவு- இயல்பு வாழ்க்கை முடக்கம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுங்குளிரும், கடுமையான பனி மூட்டமும் நிலவுகிறது.

டெல்லியில் பனி்ப்பொழிவு முன் எப்போதும் இல்லாத அளவு காணப்படுவதால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். பள்ளிகள் வரும் 11-ந் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

விமான சேவை பாதிப்பு

விமான சேவை பாதிப்பு

பனியின் காரணமாக டெல்லியில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாலும் ரத்து செய்யப்பட்டிருப்பதாலும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ரயில் சேவை பாதிப்பு

ரயில் சேவை பாதிப்பு

ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாலும் ரத்து செய்யப்பட்டிருப்பதாலும் பயணிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்

உ.பி, ராஜஸ்தானில்..

உ.பி, ராஜஸ்தானில்..

ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களிலும் பனிமூட்டத்தால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில்...

ஜம்மு காஷ்மீரில்...

ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.

பனிப்பொழிவு அதிகரிக்கும்

பனிப்பொழிவு அதிகரிக்கும்

காஷ்மீரிலும், ஹிமாச்சலப்பிரதேசத்தி்லும் இனிவரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்திருப்பது மக்களை கவலை அடைய செய்துள்ளது.

English summary
Frigid conditions showed no signs of abating as mercury hovered several notches below normal in north India and thick fog enveloped the region throwing normal life out of gear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X