For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொண்டாட்டி வீட்ல இல்லை.. சீக்கிரமா கிளம்பி வா.. அதிர வைத்த ஹாஸ்டல் வார்டன்!

ஹாஸ்டல் வார்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவியை நள்ளிரவில் வீட்டிற்கு அழைத்த வார்டன்... ஆளுநர் அதிரடி நடவடிக்கை

    ருத்ராபூர், உத்தரகாண்ட்: "என் மனைவி வீட்டில் இல்லை.. நீ உடனே கிளம்பி வந்து எனக்கு சமைத்துக் கொடு" என்று மாணவியை அழைத்த பல்கலைக்கழக ஹாஸ்டல் வார்டனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

    அதுவும் நடுராத்திரியில் போன் செய்து அந்த மாணவியை அந்த வார்டன் வருமாறு அழைத்துள்ளார். இதுதொடர்பாக அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தால் உத்தரகாண்ட் மாநில ஆளுநர் கடும் கோபமடைந்து, சம்பந்தப்பட்ட வார்டன் மீது கடும் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக துணைவேந்தருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    complaint against hostel warden calls girl student at midnight

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜிபி பந்த் விவசாய பல்கலைக்கழகம். இது மிகவும் பழமையானது. மறைந்த பிரமதர் ஜவஹர்லால் நேரு இதை தொடங்கி வைத்தார். அப்போது இதன் பெயர் உத்தரப் பிரதேச விவசாய பல்கலைக்கழகம் ஆகும். பின்னர் இதற்கு ஜிபி பந்த் பெயர் சூட்டப்பட்டது.

    இந்த பல்கலைக்கழகத்தில்தான் இந்த வார்டன் இப்படி ஒரு சேட்டையில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவு வாக்கில் சம்பந்தப்பட்ட மாணவியை இந்த வார்டன் செல்போனில் அழைத்துள்ளார். அப்போது, " என் மனைவி வீட்டில் இல்லை. கொஞ்சம் நீ வந்து சமைத்து தர முடியுமா" என்று அந்த வார்டன் கேட்டுள்ளார்.

    இதைக் கேட்டதும் அந்த மாணவிக்கு தூக்கி வாரிப் போட்டது. இந்த நேரத்தில் போய் கூப்பிடுகிறாரே.. அதுவும் மனைவி இல்லை வா என்று கூப்பிடுகிறாரே என்று அதிர்ச்சி அடைந்த அவர் வர முடியாது என்று கூறி போனை வைத்து விட்டார். ஆனாலும் விடாமல் திரும்பத் திரும்ப அந்த வார்டன் போன் செய்துள்ளார். இதனால் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் மாணவி.

    அநியாயமாக போன 2 உயிர்.. அவனா இப்படி செய்தான்.. எப்பவுமே அமைதியா இருப்பானே.. அதிர்ச்சியில் பள்ளி!அநியாயமாக போன 2 உயிர்.. அவனா இப்படி செய்தான்.. எப்பவுமே அமைதியா இருப்பானே.. அதிர்ச்சியில் பள்ளி!

    அடுத்த நாள் காலையில் அவர் முதல் வேலையாக பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியில் புகார் கொடுத்தார். ஆனால் எழுத்துப் பூர்வமாக கொடுக்காமல் வாய் வார்த்தையாக புகார் அளித்தார். இதனால் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பந்த் பல்கலைக்கழக டீன் டாக்டர் சலீல் திவாரி கூறினார்.

    இருப்பினும் விவகாரம் பெரிதாகவே அந்த வார்டனை அந்தப் பொறுப்பிலிரு்நது பல்கலைக்கழக நிர்வாகம் மாற்றி விட்டது. தற்போது உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மெளர்யா இந்த விவகாரத்தால் கொதித்துப் போயுள்ளார். இதுதொடர்பாக அவர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், உடனடியாக அந்த வார்டன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். ஹாஸ்டல் நிர்வாகம் குறித்த விரிவான அறிக்கையை தனக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    என்னெல்லாம் அக்கப்போரா இருக்கு இந்த ஆம்பளைங்களால!

    English summary
    complaint against hostel warden calls girl student at midnight and says that "wife not home come and cook for me" near uttarkhand
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X