For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் வயசு 18.. என்னை யாரும் கடத்தலை.. பத்திரமா இருக்கேன்.. நித்தியானந்தா சிஷ்யை பரபர வீடியோ

நித்யானந்தா மீது குஜராத் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    என் வயசு 18...நித்தி ஆஸ்ரமத்துல என்ன நடக்குது !

    காந்திநகர்: "என் வயசு 18.. நான் பத்திரமா இருக்கேன்.. என்னை யாரும் கடத்தவில்லை" நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டதாக கூறும் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று யாராலுமே இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை கர்நாடக போலீசார் ஒரு பக்கம் வலைவீசி தேடிவருகிறார்கள். ஆனாலும் யூடியூப் வாயிலாக பக்தர்களுக்கு காட்சி தந்து அவர்களுடன் உரையாடி வருகிறார் நித்யானந்தா.

    எப்போதெல்லாம் இவர் காட்சி தருகிறாரோ அப்போதெல்லாம் எதாவது ஒரு பகீர் குண்டை தூக்கி போட்டுவிட்டு போவார். அந்த பகீர், சர்ச்சையாக வெடித்து சிதறி, சின்னாபின்னமாக தொடங்கிவிடும்.

    2 நாள் முன் வந்த அந்த செய்தி.. அரசியலில் புது கூட்டணி அமைக்க ரஜினி - கமல் பிளானா? பின்னணி இதுதான்!2 நாள் முன் வந்த அந்த செய்தி.. அரசியலில் புது கூட்டணி அமைக்க ரஜினி - கமல் பிளானா? பின்னணி இதுதான்!

    வீடியோ

    வீடியோ

    அந்த விவகாரம் முடிவதற்குள் அடுத்த பகீரை கிளப்புவார் நித்தியானந்தா. ஒருவேளை அவர் பரபரப்பை கிளப்பவில்லை என்றாலும், அவரது பக்தைகள் வீடியா வெளியிட்டு கிளப்பி விட்டுவிடுவார்கள். ஆனால், இப்போது பக்தைகளின் தந்தை ஒருவர் நித்யானந்தா மீது புகார் தெரிவித்துள்ளார்.

    கல்வி நிறுவனம்

    கல்வி நிறுவனம்

    பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனா ஷர்மா. இவர் குஜராத் ஹைகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார். அதில், அவர் சொல்லி உள்ளதாவது: "கடந்த 2013-ல் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவுக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய மகள்களைச் சேர்த்தோம். ஆனால், அவர்கள் பெங்களூரிலிருந்து அகமதாபாத் கிளைக்கு மாற்றப்பட்டு விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

    மறுப்பு

    மறுப்பு

    அதனால் அகமதாபாத் சென்றோம். ஆனால் அங்குள்ள ஆசிரம ஊழியர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதன் பிறகு போலீசுடன் சென்று ஒரு மகளை மீட்டோம். ஆனால் மூத்த மகள்கள் லோகமுத்ரா, மற்றும் நந்திதா, இரண்டு பேருமே வரமறுத்துவிட்டார்கள். அதனால் அவர்களை மீட்டுத்தருமாறு அந்த தம்பதி மனுவில் கூறியுள்ளார்.

    புகார் மனு

    புகார் மனு

    தன் குழந்தைகளை கடத்தி சென்று அடைத்து வைத்துள்ளதாக அகமதாபாத் விவேகானந்தா நகர் ஸ்டேஷனிலும் ஜனார்த்தன ஷர்மா புகார் மனு அளித்தார். இதையடுத்து நித்யானந்தா உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அகமதாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி. ஆச்சாரி கூறியுள்ளார்.

    பத்திரமா இருக்கேன்

    பத்திரமா இருக்கேன்

    இந்நிலையில் ஜனார்த்தனா ஷர்மாவின் மூத்தமகள் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மா நித்தியானந்தா என்ற பெயரில் பேஸ்புக்கில் அந்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில், "எனக்கு 18 வயசாகுது.. என்னை யாரும் கடத்தவில்லை. நான் பத்திரமாக இருக்கேன்.. என் விருப்பப்படியேதான் இருக்கிறேன்.. எங்கு வேண்டுமானாலும் போறேன், வருகிறேன்.

    பரபரப்பு வீடியோ

    பரபரப்பு வீடியோ

    ஆனால், நான் கடத்தப்பட்டதாகக் கூறி சொல்லி, எனக்கு மனஅழுத்தத்தை தருகிறார்கள். எனக்கு இங்கே நித்தியானந்தா ஆசிரமத்தில் எந்த தொந்தரவும் இல்லை, பெற்றோரை பார்க்கவும் எனக்கு விருப்பமில்லை" என்று தெரிவித்துள்ளார். மகள்கள் வேண்டும் என்று கோர்ட் வாசற்படியில் பெற்ற தந்தை ஏறி இறங்கிவரும் நிலையில், திடீர் திருப்பமாக இப்படி ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை தந்துவருகிறது.

    English summary
    karnataka man filed case against nithyananda in gujarat hc and his daughter released video that "i am is safe"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X