For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியல் சரிப்படாது- ஜெயிலுக்கு போகாம இருக்கிற வழியை பாருங்க...ராபர்ட் வதேராவுடன் சு.சுவாமி மோதல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அமைச்சர்கள் ஹோட்டல் சர்வர்களைப் போல உடை அணிவதாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பதிலடியாக ராபர்ட் வதேராவையும் வறுத்தெடுத்திருக்கிறார் சு.சுவாமி.

Concentrate on staying out of jail: Swamy’s advice to Robert Vadra

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் என தொடங்கி தற்போது நிதி அமைச்சர் அருண்ஜேட்லியுடன் கடுமையாக மோதி வருகிறார் சு.சுவாமி. நானெல்லாம் ஒழுங்கீனமாக நடந்தால் ரத்த ஆறுதான் ஓடும் என 'வடிவேல்' ரேஞ்சுக்கு கூட ஒரு பதிவை போட்டிருக்கிறார் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் சு.சுவாமி.

அதேபோல், வெளிநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்கள் இந்தியாவின் பாரம்பரிய மற்றும் இந்திய பாணி நவீன உடைகளில் செல்ல பாஜக அறிவுறுத்த வேண்டும். கோட் மற்றும் டை-யில் இவர்கள் வெயிட்டர்கள் போல் காட்சியளிக்கின்றனர் எனவும் மற்றொரு ட்விட்டர் பதிவை போட்டு கலாய்த்திருந்தார். இதற்கு தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ராபர்ட் வதேரா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், வாழ்வாதாரத்துக்காக வெயிட்டர் வேலையில் கடினமாக உழைப்பவர்களை இப்படி தரக்குறைவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது, மற்றவர்களை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி பேசுவது இழிவானது எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, வதேரா தன்னை ஜெயிலுக்குச் செல்லாமல் பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அரசியல் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அக்கப்போர்! அக்கப்போர்!!

English summary
Hitting back at Robert Vadra for the criticism of his tweet on waiters, BJP leader BJP MP Subramanian Swamy on Saturday said Sonia Gandhi’s son-in-law should concentrate on staying out of jail instead of commenting on political issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X