For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல்: மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவில் மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சிக்குள் அழுத்தம்!

மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து மோடி அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான பணிகளிலும் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.

[ குட்டி தேவதை நீவ்.. ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று வரலாறு படைத்த "நியூசிலாந்தின் முதல் குழந்தை" ]

ஆனாலும், எதிர்க்கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எதிர்க்கட்சி கூட்டணிக்கு யார் தலைவர்? வெற்றி பெற்றால் யார் பிரதமர்? என பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. அந்த மாநிலங்களில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கலக்கம்

காங்கிரஸ் கலக்கம்

இந்நிலையில் சத்தீஷ்கரில் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மாயாவதி முடிவு செய்துள்ளார். இது அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாயாவதியுடன் சேர அழுத்தம்

மாயாவதியுடன் சேர அழுத்தம்

இந்நிலையில் மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க அம்மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த இரு மாநிலங்களிலும் மாயாவதிக்கு கணிசமான ஆதரவு உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியினர் நெருக்கடி

காங்கிரஸ் கட்சியினர் நெருக்கடி

கடந்த வாரம், மாயாவதி மத்தியப் பிரதேசத்தில் 22 வேட்பாளர்களை அறிவித்தார். மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாயாவதி விருப்பம்

மாயாவதி விருப்பம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் கூட்டணி வைக்கும் கட்சிகளுடன் ஒரு 'தொகுப்பு ஒப்பந்தத்தை பெற விரும்புகிறார் மாயாவதி.

English summary
Congress leaders from MP and Maharashtra gives pressure on the party high command to forge an alliance with the BSP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X