For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தலில் 'கை' கொடுத்த ராஜஸ்தான், ம.பியில் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்தானாம்!

Google Oneindia Tamil News

போபால்/ ஜெய்ப்பூர்: சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸை ஆட்சியில் அமரவைத்த ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்கள் அண்மையில் நடைபெற்றன. இத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

வரலாற்றை இளையோருக்கு எடுத்து செல்ல முயற்சி.. சுவிட்சர்லாந்தில் தமிழர் களறி ஆவணக்காப்பகம் திறப்பு வரலாற்றை இளையோருக்கு எடுத்து செல்ல முயற்சி.. சுவிட்சர்லாந்தில் தமிழர் களறி ஆவணக்காப்பகம் திறப்பு

ஆருடங்கள் சொன்னது

ஆருடங்கள் சொன்னது

இந்த வெற்றியானது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. சட்டசபை தேர்தல் முடிவுகளைப் போலத்தான் லோக்சபா தேர்தல் முடிவுகளும் இருக்கும் என்றே கூறப்பட்டது.

காங்கிரஸுக்கு தோல்வி?

காங்கிரஸுக்கு தோல்வி?

ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தலைகீழாக வந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இம்மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் சீட்டுகள்தான் கிடைக்கும் என அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளும் திட்டவட்டமாக கூறுகின்றன. மத்திய பிரதேசம் குறித்த எக்ஸிட் போல் முடிவு விவரங்கள்:

ம.பியில் பாஜக அலை?

ம.பியில் பாஜக அலை?

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள். இதில் பாஜக நிச்சயம் 24 தொகுதிகளைக் கைப்பற்றிவிடும் என்பதே அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளின் கணிப்பு. நியூஸ் 24- சாணக்யாவோ பாஜக 27 இடங்க்ளைக் கைப்பற்றும் என்கிறது. அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸுக்கு மிக அதிகபட்சமாக 8 தொகுதிகளுக்கு வாய்ப்பு உள்ளது என்கிறது ரிபப்ளிக்- ஜன்கிபாத் கணிப்பு.

ராஜஸ்தான் காங். பின்னடைவு

ராஜஸ்தான் காங். பின்னடைவு

ராஜஸ்தானில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 19 முதல் 25 தொகுதிகளைக் கைப்பற்றும் என்கின்றன எக்ஸிட் போல் கணிப்புகள். நியூஸ் 24- சாணக்யா கணிப்பின் படி ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாதாம். மிக அதிகபட்சமாக 6 இடங்கள் கிடைக்கலாம் என்கிறது ஏபிபி-ஏசி நீல்சன் கணிப்பு,

English summary
According to the Exit Polls, Congress may fail to capitalise on gains in MP, Rajasthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X