For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பிள்ளை பிடிக்கும்" பாஜகவிடமிருந்து எம்எல்ஏக்களை காக்க... கூவத்தூர் பார்முலாவுக்கு தாவும் காங்.!

கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றவுடன் ஈகிள்டன் ரிசார்ட்டில் அவர்களை தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கூவத்தூர் ஸ்டைலில் ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் எம்எல்ஏக்கள்.

    பெங்களூர்: கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றவுடன் பாஜகவின் வலையில் சிக்காமல் இருக்க ஈகிள்டன் ரிசார்ட்டில் அவர்களை தங்க வைக்க பேருந்தில் அனுப்பப்பட்டுள்ளனர்.

    கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் ஜேடிஎஸ் கட்சியை கெட்டியாக பிடித்துக் கொண்டது.

    எனினும் ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களையும் காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் கழுகு போல் கொத்திக் கொள்ள பாஜக காத்து கொண்டிருக்கிறது.

    காங்கிரஸ் எம்எல்ஏ

    காங்கிரஸ் எம்எல்ஏ

    கர்நாடகத்தில் பாஜக தனிபெரும்பான்மைமை நிரூபிக்க அக்கட்சி 4 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை பிடித்து ஆட்சியை பிடிக்க பாஜக எத்தகைய எல்லைக்கும் போகும் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி குஷ்டகி எம்எல்ஏ (காங்) அமரேகௌடா லிங்கனா கௌடா பய்யாபூரை பாஜகவினர் தொடர்பு கொண்டு ஆசைவார்த்தைகளை காட்டி வருவதாக அவரே தெரிவித்தார்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    பாஜகவை பற்றி முழுமையாக தெரிந்த காங்கிரஸ் கட்சி அதன் எம்எல்ஏக்களை பாதுகாத்துக் கொள்ள திட்டமிட்டது. அதன்படி எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தவுடன் அவர்களை அப்படியே சொகுசு பேருந்தில் ஏற்றி ஈகிள்டன் ரிசார்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    அதிமுகவின் பார்முலா

    அதிமுகவின் பார்முலா

    ஜெயலலிதா மறைந்தவுடன் ஓபிஎஸ் மற்றும் திமுகவிடம் இருந்து தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாத்துக் கொள்ள கூவத்தூரில் சசிகலா தரப்பு சிறை வைத்தது. அந்த பார்முலாவை காங்கிரஸ் கட்சியும் மாநிலங்களவை தேர்தலின்போது அமித்ஷா- அகமது பட்டேல் இடையே போட்டி நிலவியபோது செய்தது.

    பொறுப்பை ஏற்கிறார்

    பொறுப்பை ஏற்கிறார்

    குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவின் புள்ளைபுடிப்பதில் இருந்து காத்து பத்திரப்படுத்தும் பொறுப்பு மூத்த தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. அதன்படி இந்த முறையும் கர்நாடக எம்எல்ஏக்களை ஈகிள்டன் ரிசார்டில் வைத்து பாதுகாக்கும் பணியை இவரே ஏற்பார் என்று தெரிகிறது.

    English summary
    After the meeting all the cong MLAs are expected to be taken to Eagleton resort in Bangalore, thisis where the Gujarat MLAs were kept during amit shah- ahmed patel RS contest- it was DK Shivakumar, senior cong leader, who kept the mlas there. now he is again going to take charge to keep the cong mlas safe from BJP poaching.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X