For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியலில் 'தீண்டாமை' கூடாது..: பவார் கருத்துக்கு பாஜக வரவேற்பு!

By Mathi
Google Oneindia Tamil News

Sharad Pawar
டெல்லி: அரசியலில் கட்சிகளிடையே தீண்டாமையை கடைபிடிக்கக் கூடாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்தை பாஜக வரவேற்றுள்ளது.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ளது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ். ஆனால் அண்மையில், அரசியலில் கட்சிகளிடையே தீண்டாமை என்பதை கடைபிடிக்கக் கூடாது..அதாவது தீண்டத்தகாத கட்சி என்று எதையும் ஒதுக்கக் கூடாது என்ற பொருளில் பவார் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவாரின் கருத்து குறித்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மெளனம் காத்து வருகிறது.

ஆனால் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவோ, எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை சரத்பவார் பிரதிபலித்துள்ளார் என்று புகழாரம் சூட்டி வரவேற்றுள்ளது.

அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவோ, தாம் எந்த ஒரு கருத்தும் இப்போதைக்கு தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

English summary
NCP chief Sharad Pawar's statement that untouchability should not be practiced in politics has made the BJP hopeful, while the Congress — Pawar's ally in Maharashtra and at the Centre — has chosen not to react.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X