For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரசிடம் காசே இல்லையாம்.. ஆனால் தேர்தல் செலவு மட்டும் ரூ.820 கோடியாம்!

Google Oneindia Tamil News

டெல்லி : காங்கிரஸ் கட்சியில் பணமே இல்லை என்று கடந்த மே மாதத்தில் காங்கிரசின் சமூக வலைதள ஊடக தலைவரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா, தெரிவித்திருந்த நிலையில், தற்போது மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் செலவிட்டுள்ள தொகை ரூ.820 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் 516 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 820 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக இந்த தேர்தலுக்காக செலவிட்ட தொகை குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடாத நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் செலவினங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இப்போதும் சொல்கிறேன்.. தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது.. ரஜினிகாந்த்இப்போதும் சொல்கிறேன்.. தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது.. ரஜினிகாந்த்

செலவு ரூ.820 கோடி மட்டுமே

செலவு ரூ.820 கோடி மட்டுமே

நடந்து முடிந்துள்ள மக்களவை பொதுத்தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு யுக்திகளை கையாண்டது. ஆனால் அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது. ஆனால் இதற்கு செலவிடப்பட்டுள்ள தொகை ரூ.820 கோடி என்று தற்போது காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் செலவு

சட்டமன்ற தேர்தல் செலவு

மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் ஆந்திரா, அருணாச்சலபிரதேசம், தெலங்கானா, ஒடிசா மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெற்ற நிலையில், இந்த தேர்தல்களுக்கான செலவு ரூ.820 கோடி என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தற்போது ரூ.820 கோடி

தற்போது ரூ.820 கோடி

கடந்த 2014ல் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 516 கோடி ரூபாய் செலவிட்டிருந்த நிலையில் தற்போது இந்தத் தொகை 820 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தேர்தல் செலவினங்கள்

தேர்தல் செலவினங்கள்

கடந்த பொதுத் தேர்தலில் பிரசாரத்திற்காக 626.3 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக 193.9 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திடம் கடந்த 31ம் தேதி சமர்பித்த தேர்தல் செலவினங்கள் குறித்த அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி ரூ.73.1 லட்சம்

மார்க்சிஸ்ட் கட்சி ரூ.73.1 லட்சம்

இதேபோல தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் செலவினங்களாக ரூ.83.6 கோடி என தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ரூ.55.4 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 73.1 கோடி செலவானதாக அறிக்கை அளித்துள்ளன.

கேரளாவில் மட்டும் ரூ.13 கோடி

கேரளாவில் மட்டும் ரூ.13 கோடி

மக்களவை தேர்தலில் ராகுல் போட்டியிட்ட கேரளாவில் மட்டும் அக்கட்சி 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, சட்டீஸ்கர் மற்றும் ஒடிசாவில் ரூ.40 கோடி, உத்தரபிரதேசத்தில் ரூ. 36 கோடி,மகாராஷ்டிராவில் ரூ.18 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாஜக

பாஜக

கடந்த 2014 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக 714 கோடி ரூபாய் செலவிட்டிருந்ததாக அறிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போதைய தேர்தல் செலவினங்கள் குறித்து அக்கட்சி இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

English summary
In 2019 loksabha elections congress spent Rs.820 crore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X