For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை பூத்துள்ளதால் ஏரி, குளங்களை மூட வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

Google Oneindia Tamil News

Congress asks Election Commission to hide lotus ponds in Madhya Pradesh from voters
ஜபல்பூர்: தேசிய மலரும், பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமுமான தாமரை மலர்கள் பூத்துக் குலுங்குவதால், மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஏரி, குளங்களை மூட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளாது.

மத்தியப் பிரதேச ஏரிகள் மற்றும் குளங்களில் தாமரை மலர்கள் பூத்துக் குழுங்குவதால் கலக்கத்தில் உள்ளனராம் காங்கிரசார். காரணம் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமான தாமரையை மக்களுக்கு நினைவூட்டுவதாக இது அமைந்துள்ளது தான்.

எனவே, சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களை உடனடியாக மூட வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது காங்கிரஸ்.

அப்படியானால், காங்கிரஸின் தேர்தல் சின்னத்தை நினைவூட்டுகிறது என மக்களைக் கைகளை மூடிக் கொள்ள உத்தரவிட முடியுமா என காங்கிரஸின் கோரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு முன்னர், உத்தரப்பிரதேசத்தில் யானை சிலைகள் குறிப்பிட்ட கட்சியின் தேர்தல் சின்னத்தை நினைவு படுத்துகிறது எனக் கூறி மூடி வைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
The Congress is upset about lotuses in full autumn bloom in water bodies of Mahakaushal, Malwa and Bundelkhand regions in poll-bound Madhya Pradesh. The party on Monday wrote to the Election Commission (EC) to "hide" the national flower from public view so that voters aren't unfairly drawn to the BJP symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X