For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுல் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதில் எங்கே.. பாஜகவுக்கு காங். கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுக்கு பாஜக நேரடியாக பதில் தரவில்லை என்று பேச்சு எழுந்துள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் இன்று காலை நடந்தபோது ராகுல் காந்தியின் பேச்சுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக்சபாவை அதிர வைத்த அவர் அடுக்கடுக்காக பல பிரச்சினைகளை எடுத்து வைத்து விளக்கம் கேட்டார். குறிப்பாக பிரதமரையே குற்றம் சாட்டி அவர் பல பிரச்சினைகளை எடுத்து வைத்தார்.

Congress asks why no straight answers to Rahuls charges from BJP?

ரபேல் பீரங்கி ஒப்பந்தம், வேலையில்லாத் திண்டாட்டம், டோக்லாம் எல்லைப் பிரச்சினை, பிரதமர் மோடியின் சீனப் பயணம், முதலாளித்துவத்திற்கு மோடி அரசு ஆதரவாக இருப்பது, விவசாயிகள் பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு என பல முக்கிய பிரச்சினைகளில் மோடியிடம் அவர் விளக்கம் கேட்டார்.

மோடி உண்மையாக இல்லை. அவர் எல்லாவற்றுக்கும் மெளனமாக இருக்கிறார். அவர் நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

ஆனால் விவாதம் மீதான பதிலுரையில் பாஜக தரப்பில் இதற்கு நேரடியான விளக்கம் அளிக்கவில்லை என்ற முனுமுனுப்பு முழுந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இதை விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் இளம் தலைவர் ஜோதிமணி போட்டுள்ள ஒரு டிவீட்டில், காலிப் பாத்திரம்தான் அதிக சத்தம் தரும். இது தேர்தல் பிரசாரம் அல்ல திரு. மோடி. ராகுல் காந்தி கேட்ட குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் எங்கே என்று அவர் கேட்டுள்ளார்.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது யார் என்று கூட பிரதமருக்குத் தெரியவில்லை. தீர்மானத்தைக் கொண்டு வந்த தெலுங்கு தேசத்தைத்தான் அவர் முதலில் விமர்சித்திருக்க வேண்டும். மாறாக. அவர் எடுத்த எடுப்பிலேயே காங்கிரஸை சரமாரியாக சாடுகிறார். பிரதமருக்கு என்ன பேசுவது என்று இலக்கு இல்லை என்று இவர் சாடியுள்ளார்.

English summary
Congress and ohters are asking why no stragight answers to Rahul's charges from BJP? in PM's reply in the Loksabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X