For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் புதிய திருப்பம்: பாஜக அணிக்கு போகிறது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி!!

By Mathi
|

ஹைதராபாத்: லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில் ஆந்திராவில் புதிய திருப்பமாக தெலுங்கா ராஷ்டிரிய சமிதி, பாரதிய ஜனதா பக்கம் தாவ இருக்கிறது.

ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்தது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி. ஒருகட்டத்தில் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியையே காங்கிரசுடன் இணைத்துவிடுவேன் என்றும் அறிவித்தார் அக்கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ்.

காங்கிரஸும் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் ஒருவழியாக தெலுங்கானாவை உருவாக்கிவிட்டது. அதே நேரத்தில் லோக்சபா தேர்தலும் நெருங்கிவிட்டது.

இரட்டை நிலை

இரட்டை நிலை

எப்படியும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இணைந்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் ஒருபக்கம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு மற்றொரு பக்கம் தெலுங்கானா போராட்டக் குழுவின் ஆதரவையும் கோரியது காங்கிரஸ்.

தனித்து போட்டி..

தனித்து போட்டி..

இதனால் தெலுங்கானாவில் இந்த இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடும் என்ற நிலைமை இருக்கிறது. தற்போது வெளியாகின்ற தேர்தல் கருத்து கணிப்புகள், காங்கிரஸ் கட்சியும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் சம அளவில் தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறுகின்றன. ஆனால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவே என்கிறது கருத்து கணிப்புகள்.

பாஜகவுக்கு தாவல்

பாஜகவுக்கு தாவல்

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவர் கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி, பாஜக அணிக்கு தாவக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏன் காங்கிரஸை ஆதரிக்கலை?

ஏன் காங்கிரஸை ஆதரிக்கலை?

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

தற்போதைய நிலையில் காங்கிரஸுடனான கூட்டணி என்பதற்கான சாத்தியம் மிகக் குறைவு. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கான வாய்ப்பும் இல்லை என்கிறது கருத்து கணிப்புகள். எங்களைப் பொறுத்தவரை அன்று தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுத்தோம். இப்போது நல்ல நிர்வாகத்தை தெலுங்கானாவில் கொடுக்க வேண்டும் என்பதுதான் இலக்கு.

பாஜக தலைமையிலான அணியில்..

பாஜக தலைமையிலான அணியில்..

அதனால் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதில் பயனில்லை. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்பதற்கான நிலைமை இருக்கிறது.. அதை மறுப்பதற்கில்லை.

இவ்வாறு கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

English summary
In an exclusive interview to IBNLive, TRS leader Konda Vishweshwar Reddy says that while the party's agenda till now was fighting for a separate state, now the focus will be on providing good governance.Vishweshwar Reddy, who is likely to contest Lok Sabha elections from Chevella seat, accused the Congress of betraying the cause of Telangana and said that there is a possibility of the TRS supporting the BJP-led NDA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X