For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லாமே ஜாதிதான்.. ராஜஸ்தான் தேர்தலில் போட்டிபோட்டுக்கொண்டு பாஜக - காங்கிரஸ் செய்த வேலை!

பொதுவெளியில் எவ்வளவு தான் அடிச்சுக்கிட்டாலும் பாஜக- காங்கிரஸ் கட்சி இடையே வேட்பாளர்களை நிறுத்துவதில் என்ன ஒரு ஒற்றுமை என வாயடைத்து போய் நிற்கிறார்கள் ராஜஸ்தான் மக்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜஸ்தான் தேர்தலில் சாதிய வேட்பாளர்களை பெரிதும் நம்பும் காங்கிரஸ்,பாஜக- வீடியோ

    ஜெய்ப்பூர்: பொதுவெளியில் எவ்வளவு தான் அடிச்சுக்கிட்டாலும் பாஜக- காங்கிரஸ் கட்சி இடையே வேட்பாளர்களை நிறுத்துவதில் என்ன ஒரு ஒற்றுமை என வாயடைத்து போய் நிற்கிறார்கள் ராஜஸ்தான் மக்கள்.

    வட மாநிலங்களில் ஜாதி பற்று, பாசம் மிக அதிகம். அந்த வகையில், ராஜஸ்தான் தேர்தலிலும் அதே நிலவரம். தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சாதி பார்த்து தான் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    ராஜஸ்தானில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. இதன் மூலம் பாஜகவோ அல்லது காங்கிரஸ் கட்சியிலோ யார் வென்றாலும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான் எம்எல்ஏக்களாக இருப்பார்கள்.

    ஜாதி வாக்கு

    ஜாதி வாக்கு

    ராஜஸ்தானில் ஜாட், ராஜ்புத்ரா மற்றும் மீனா ஆகிய ஜாதிகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த கட்சிகள் 10 சதவீதத்துக்கும் குறைவில்லாத வகையில் வாக்குவங்கியை வைத்துள்ளன. இதன் மூலம் அரசை அமைப்பதோ அல்லது எந்த அரசியல் கட்சியையும் வீழ்வதோ இந்த ஜாதியில் உள்ள சங்கத்தினரால் நடத்தி காட்ட முடியும்.

    ஜாதி சதவீதம்

    ஜாதி சதவீதம்

    ராஜஸ்தானில் மொத்தம் 272 ஜாதிகள் உள்ளன. இதில் 51 சதவீதம் மக்கள் ஓபிசி பட்டியலை சேர்ந்தவர்கள் ஆவார். ஜாட் சமூகத்தினர் 9 சதவீதம், குஜராஸ் 5 சதவீதம், மாலி 4 சதவீதம் என்ற அளவில் உள்ளனர். தாழ்த்தப்பட்ட பிரிவில் மொத்தம் 59 சாதிகள் உள்ளனர். பிராமணர்கள் 7 சதவீதம் பேர் உள்ளனர். ராஸ்புத்ராக்கள் 6 சதவீதமும், வைஸ்யா 4 சதவீதமும் உள்ளனர்.

    ஜாதி வேட்பாளர்கள்

    ஜாதி வேட்பாளர்கள்

    ஜாட், மீனா, ராஜ்புத்ரா மற்றும் பிராமின்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் ஆளுமை செலுத்தும் முக்கியமானவர்களாக உள்ளனர். இன்று நடைபெறும் தேர்தலில் இவர்களது ஆதிக்கம் தான் இருக்கும். ஏனெனில் இந்த மூன்று ஜாதியையும் சேர்த்து பார்த்தால், மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது.

    60 வேட்பாளர்கள்

    60 வேட்பாளர்கள்

    9 தொகுதிகளில் பிகில் ஜாதியைச் சேர்ந்தவர்களையே வேட்பாளராக காங்கிரசும், பாஜகவும் நிறுத்தியுள்ளன. 15 தொகுதிகளில் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே பாஜகவும், காங்கிரசும் நிறுத்தியுள்ளன. 9 தொகுதிகளில் இரண்டு கட்சிகளுமே மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தியுள்ளது. இவ்வாறு ஒட்டுமொத்தமாக 60 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒரே ஜாதியில் இருந்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

     ஃபாலோ

    ஃபாலோ

    ஒரே ஜாதியில் வேட்பாளர்களை நிறுத்தினால் தான் வாக்குகள் சிதறி தாங்கள் வெற்றி பெற முடியும் என்பதை இரண்டு தேசிய கட்சிகளுமே உணர்ந்துள்ளன. அதுசரி... இதே பாணி தமிழகத்தில் வெல்லுமா? வரும் தேர்தலில் பார்ப்போம்.

    English summary
    Congress and the BJP have fielded candidates belonging to the same community at least 60 in same seats in Rajasthan assembly election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X