For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி. சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி... அடம்பிடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: 2017ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை அள்ளிய பா.ஜ.க. சட்டசபை தேர்தலிலும் சாதித்து ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டு வருகிறது.

Congress to contest UP polls on its own

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து மகா கூட்டணியை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றியது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கிபா.ஜ.க.வுக்கு செக் வைக்க வேண்டும் என்ற முயற்சிகள் ஒருபக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரப்பிரதேச முதல்வரான சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவும் கூட இதனை வலியுறுத்தி வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி இப்படியான ஒரு மகா கூட்டணியை நிராகரித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் எந்த ஒரு கூட்டணியிலும் இடம்பெறாமல் 403 தொகுதிகளிலும் தனித்தே காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் உ.பி. காங்கிரஸ் பொதுச்செயலர் மதுசூதன் மிஸ்ரி, உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் நிர்மல் காத்ரி, முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புனியா, ஆர்.பி.என். சிங், ரீடா பகுகுணா ஜோஷி, ராஜீவ் சுக்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட வேண்டும் என்ற கருத்தை கட்சியின் மேலிடத்திடம் தெரிவிப்போம். களநிலவரத்தைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்றார்

2012ஆம் ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 355 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 28 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது; ராஷ்டிரிய லோக் தளம் கட்சி 46 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களைக் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Uttar Pradesh Congress was decided that the party would contest the Uttar Pradesh Assembly elections on its own.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X