For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிற்படுத்தப்பட்ட மக்களின் நாயகன் 'அல்பேஷ்' வெற்றி.. குஜராத்தில் உருவாகிறதா காங்கிரஸின் புதிய தலைமை?

காங்கிரஸின் முக்கிய வேட்பாளர் அல்பேஷ் தாக்குர் தான் போட்டியிட்ட ரந்தன்பூர் தொகுதியில் வெற்றிபெற்று இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

அஹமதாபாத்: காங்கிரஸின் முக்கிய வேட்பாளர் அல்பேஷ் தாக்குர் தான் போட்டியிட்ட ரந்தன்பூர் தொகுதியில் வெற்றிபெற்று இருக்கிறார். குஜராத் தேர்தலில் முக்கிய அங்கம் வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் 14857 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

குஜராத்தில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. காங்கிரஸ் 79 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

Congress contestant Alpesh Thakore wins in Randhanpur

இந்த தேர்தலில் ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்குர் என்ற மூன்று இளம் தலைவர்களும் முக்கிய பங்கு வகித்தார்கள். இதில் ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார்.

தற்போது பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக பார்க்கப்படும் காங்கிரஸின் அல்பேஷ் தாக்குர் ரந்தன்பூர் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். இவர் 85,777 வாக்குகள் பெற்றுள்ளார்.

பாஜக வேட்பாளர் சோலங்கி லாவிங்ஜி தாக்குர் 70,920 வாக்குகள் பெற்று இருக்கிறார். இதனால் அல்பேஷ் தாக்குர் 14857 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக அல்பேஷ் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

English summary
Congress contestant Alpesh Thakore wins in Randhanpur with 85,777 votes. BJP contestant Solanki Lavingji Muljiji Thakor got only 70,920 votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X