For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நமோ 'டீ' வேண்டாம் பாஸ்.. ராகா 'பால்' குடிங்க, உடம்புக்கு ரொம்ப நல்லது.. காங்.கின் பதிலடி 'யாவாரம்'!

Google Oneindia Tamil News

டெல்லி: நடைபெற உள்ள லோக்சபாத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் டீ பிரசாரத்திற்கு சவால் விடும்படியாக, ‘ராகா' பால் விநியோகத்தைத் துவக்கியுள்ளனர் காங்கிரஸார்.

குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை , டீ வியாபாரி என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஆயிரம் டீ கடைக்காரர்களுடன் விவாத நிகழ்ச்சியை மோடி அரங்கேற்றினார்.

மேலும், தேநீர் பந்தல் என்ற பெயரில் ஒரு ரூபாய் டீக்கடைகளைத் துவக்கினர் பாஜகவினர். சில இடங்களில் இலவசமாக டீ வழங்கவும் ஏற்பாடு செய்தனர். பாஜகவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் கலங்கிப் போன காங்கிரஸ் தற்போது ‘ராகா' பால் என்ற போட்டிக் கடையைத் திறந்துள்ளனர்.

ராகா பால்....

ராகா பால்....

‘ராகா' என்பது காங்கிரஸின் மறைமுக பிரதம வேட்பாளரான ராகுல் காந்தி பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் ஆகும்.

உ.பி காங்கிரஸ்...

உ.பி காங்கிரஸ்...

இந்த ‘ராகா' பால் வினியோகத்தை உத்திர பிரதேச காங்கிரஸ் கட்சியினர் தொடங்கியுள்ளனர்.

ராகுல் படம் போட்ட கப்...

ராகுல் படம் போட்ட கப்...

உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோராக்பூர் பகுதியில் ராகுல் காந்தி படம் போட்ட பேப்பர் கப் மூலம் பால் வினியோகத்தை அக்கட்சியினர் மேற்கொண்டுள்ளனர்.

பதிலடி....

பதிலடி....

‘ராகா' பால் வினியோகம் குறித்து கோரக்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சையது ஜமால் கூறும்போது, ‘மோடியின் ஒவ்வொரு திட்டத்திற்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். தற்போது கோல்கர் பகுதியில் துவக்கப்பட்டுள்ள இந்த பிரசாரம், விரைவில் 50 லிட்டர் பால் வினியோகம் செய்து இந்த பிரச்சாரம் விரிவுபடுத்தப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

டீ நல்லதல்ல... பால் குடியுங்கள்

டீ நல்லதல்ல... பால் குடியுங்கள்

மேலும், டீ உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதேபோல் மோடி நாட்டு நலனுக்கு நல்லவர் அல்ல என்று வாக்காளர்களிடம் நாங்கள் அறிவுறுத்துகிறோம்' என்கிறார் சையது.

English summary
The Congress is seeking to counter NaMo chai with RaGa (Rahul Gandhi) milk, says a report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X