For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸாருதீனை ராஜஸ்தானுக்கு ஷிப்ட் செய்தது காங்... ஊழல் கல்மாடிக்கு ஆப்பு

|

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் உ.பி மாநிலத்திலிருந்து இந்த முறை ராஜஸ்தானுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் டோங் சவாய் மாதோபூர் தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், காமன்வெல்த் ஊழலில் சிக்கி அசிங்கப்பட்ட சுரேஷ் கல்மாடிக்கும், அவரது மனைவிக்கும் காங்கிரஸ் டிக்கெட் தரப்படவில்லை.

டெல்லியில் தற்போது எம்.பியாக உள்ள ஐந்து பேருக்கும் மீண்டும் டிக்கெட் தரப்பட்டுள்ளது.

மொராமொராதாபாத்திலிருந்து ராஜஸ்தானுக்கு

மொராமொராதாபாத்திலிருந்து ராஜஸ்தானுக்கு

அஸாருதீன் உ.பி. மாநிலம் மொராதாபாத்தில் தற்போது எம்.பியாக இருக்கிறார். அவரை ராஜஸ்தான் மாநிலத்திற்கு இந்த முறை மாற்றி விட்டது காங்கிரஸ்.

கல்மாடிக்கு ஆப்பு

கல்மாடிக்கு ஆப்பு

ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடிக்கு சீட்டுத் தரப்படவில்லை. அவர் இதுவரை வகித்து வந்த புனேை சீட் தற்போது விஸ்வஜீத் கடமுக்குத் தரப்பட்டுள்ளது.

டெல்லியில் அனைவருக்கும் மீண்டும்

டெல்லியில் அனைவருக்கும் மீண்டும்

டெல்லியில் தற்போது எம்.பிக்களாக உள்ள கபில் சிபல், அஜய் மேக்கான், சநதீப் தீக்ஷித், ஜெய் பிரகாஷ் அகர்வால் ஆகியோருக்கு மீண்டும் அவர்களின் தொகுதிகளையே ஒதுக்கி விட்டனர்.

முசாபர்நகரில் வேட்பாளர் மாற்றம்

முசாபர்நகரில் வேட்பாளர் மாற்றம்

வன்முறை வெடித்த முசாபர்நகரில் ஏற்கனவே சூரஜ் வர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரை மாற்றி விட்டு பங்கஜ் அகர்வால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சச்சின் பைலட்டுக்கு அஜ்மீர்

சச்சின் பைலட்டுக்கு அஜ்மீர்

சச்சின் பைலட் அஜ்மீர் தொகுதியில் நிறுத்தப்படுகிறார்.

318 வேட்பாளர்கள் இதுவரை அறிவிப்பு

318 வேட்பாளர்கள் இதுவரை அறிவிப்பு

இதுவரை காங்கிரஸ் கட்சி 318 வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Denying Lok Sabha ticket to its scam-tainted leader Suresh Kalmadi and his wife, the third Congress list, which includes 58 names fails to suspense on Varanasi seat. The cricketer-turned politician Mohammad Azharuddin has been shifted to Tonk-Sawai Madhopur in Rajasthan, from Moradabad in UP. The prestigious Pune seat, till now represented by Kalmadi has been given to Vishwajeet Kadam . Out of 7 Delhi seats, the list has announced five candidates repeating all sitting MPs, Kapil Sibal (Chandni Chowk), Jai Prakash Agarwal (North East Delhi), Sandeep Dikshit (East Delhi) and Ajay Maken (New Delhi).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X