For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாள வெள்ளத்தில் சிக்கி மதுராந்தகம் மாஜி எம்எல்ஏ காயத்ரி தேவி உள்பட தமிழர்கள் பரிதவிப்பு

நேபாள வெள்ளத்தில் மதுராந்தகம் மாஜி எம்எல்ஏ காயத்ரி தேவி உள்பட தமிழர்கள் ஏராளமானோர் சிக்கியுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கனமழை, கடுங்குளிரால் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்- வீடியோ

    காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் மதுராந்தகம் மாஜி எம்எல்ஏ காயத்ரி தேவி உள்பட 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர்.

    திபெத்தில் உள்ள கைலாஷ் மற்றும் மானசரோவருக்கு தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்துவிட்டு மலை பகுதியில் திரும்பிய போது நேபாளத்தில் கனமழை கொட்டி வருகிறது.

    Congress EX MLA Gayathri Devi stranded in Nepal

    இதனால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மோசமான வானிலையால் கடுங்குளிர் வேறு நிலவுகிறது. எனவே அவர்களை மீட்க மலைப்பாங்கான பாதை அல்லாமல் வேறு வழியாக காப்பாற்றுவது குறித்து இந்திய தூதரகம் ஆலோசனை செய்து வருகிறது.

    தற்போது அங்கு சிக்கியுள்ளவர்களுக்கு மருத்துவம், உணவு, குடிநீர் ஆகிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சுற்றுலாவுக்கு மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி 17 பேர் கொண்ட குழுவினருடன் சென்றுள்ளார். இவரும் நேபாளத்தில் மழையால் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளார்.

    இவருடன் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆங்காங்கே வெள்ளநீரில் சிக்கியுள்ளனர். மலை பகுதி என்பதாலும் கனமழையாலும் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் வயதானவர்கள் அவதிப்படுகின்றனர்.

    English summary
    Madhurantagam EX MLA Gayathri Devi stranded in Nepal who had gone with a team of 17 members to Kailash and Manasorovar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X