For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாவிந்தர் சிங் கைது சந்தேகம் தருகிறது.. புல்வாமாவில் வேறு ஏதோ நடந்துள்ளது.. காங்கிரஸ் பகீர் புகார்!

காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் கைது செய்யப்பட்ட காஷ்மீர் போலீஸ் தாவிந்தர் சிங்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் நேற்று முதல்நாள் கைது செய்யப்பட்ட காஷ்மீர் போலீஸ் தாவிந்தர் சிங்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் நேற்று முதல்நாள் ஸ்ரீநகர் அருகே கைது செய்யப்பட்டனர். போலீசால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி நவீத் பாபு, இர்பான், ரஃபி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை காரில் அழைத்து சென்ற ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.காஷ்மீரில் ஷோபியன் அருகே போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் இந்த மூன்று தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 நிர்பயா குற்றவாளிகள் 2 பேரின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் நிர்பயா குற்றவாளிகள் 2 பேரின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

என்ன கேள்வி

என்ன கேள்வி

இவரது கைது தொடர்பாக காங்கிரஸ் லோக்சபா தலைவர் அதிர் சவுத்திரி கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், காஷ்மீரில் நடந்து வரும் முறைகேடு இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொலை செய்யப்பட்டதும் இதன் மூலம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இதில் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்

தாக்குதல்

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும் தாவிந்தர் சிங்கிற்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். புல்வாமா தாக்குதல் குறித்து நிறைய கேள்விகளை தாவிந்தர் சிங் கைது எழுப்பி உள்ளது. உண்மையான குற்றவாளிகள் யார் என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது.

விசாரிக்க வேண்டும்

விசாரிக்க வேண்டும்

இதை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும். பலர் இதற்கு பின் இருக்கலாம். தாவிந்தர் சிங்கிற்கும் யாருக்கும் தொடர்பு இருந்தது. தாவிந்தர் சிங் இத்தனை நாட்கள் எப்படி மாட்டாமல் தப்பித்து வந்தார். இவர்களை இயக்கியது யார் என்று விசாரிக்க வேண்டும்.

யார் இவர்

யார் இவர்

தாவிந்தர் சிங், ஒருவேளை இஸ்லாமியராக இருந்திருந்தால், ஒருவேளை கான் என்று பெயர் வைத்து இருந்தால் கதையே வேறு. அவரை ஆர்எஸ்எஸ் அமைப்பு தூக்கில் போட சொல்லி இருக்கும். பாஜக கடுமையாக விசாரித்து இருக்கும். ஆனால் இப்போது அவர்கள் வாயையே திறக்கவில்லை என்று காங்கிரஸ் லோக்சபா தலைவர் அதிர் சவுத்திரி தெரிவித்துள்ளார்.

English summary
Congress gets suspicious over Pulwama attack after Davinder Singh arrest in Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X