For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் அதலபாதாளத்துக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்!

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் அதலபாதாளத்துக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுவிட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை

    டெல்லி: திரிபுரா மற்றும் நாகாலாந்தில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெல்லமுடியாமல், அந்த கட்சி அதளபாதாளத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.

    வட கிழக்கின் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. மூன்றிலும் கிட்டதட்ட எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது கண்கூடாக தெரிந்துவிட்டது.

    திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்கள் விடை கொடுத்துவிட்டார்கள். அது போல் நாகாலாந்தில் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி முன்னணி வகித்து வருகிறது.

    இடத்தை பிடிக்கவில்லை

    இடத்தை பிடிக்கவில்லை

    இதில் காங்கிரஸ் கட்சி படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாகாலாந்து, மேகாலயாவில் ஒரு இடத்தில் கூட இக்கட்சி வெல்ல முடியவில்லை.

    எதிர்த்து பிரசாரம்

    எதிர்த்து பிரசாரம்

    காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று அவர் அனல்பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்தார். எனினும் காங்கிரஸின் குரல் மக்களுக்கு போய்ச் சேரவில்லை.

    8 இடங்களில் வெற்றி

    8 இடங்களில் வெற்றி

    கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை காட்டிலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ். நாகாலாந்தில் கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இப்போது முட்டைதான் கிடைத்துள்ளது.

    பூஜ்யத்தை பெற்றுள்ளது

    பூஜ்யத்தை பெற்றுள்ளது

    இதுபோல் திரிபுராவில் கடந்த தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை முட்டையே கிடைத்தது.

    எப்படி வாக்களிக்க முடியும்

    எப்படி வாக்களிக்க முடியும்

    திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வருகிறது.

    English summary
    Congress has not created any account in Tripura and Nagaland Assembly constituencies. It goes to deep under ground when compared to last assembly election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X