For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். ஜேடிஎஸ் தலைவர்கள் ஆளுநருடன் சந்திப்பு- ஆட்சி அமைக்க அழைக்க குமாரசாமி கோரிக்கை

கர்நாடக தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததை அடுத்து ஆளுநரை சந்தித்து காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக தேர்தலில் திடீர் டுவிஸ்ட்-வீடியோ

    பெங்களூர்: கர்நாடகா தேர்தலில் தங்களை ஆதரிக்குமாறு காங்கிரஸ் கோரியதை ஏற்றுக் கொண்டதை அடுத்து குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    கர்நாடக தேர்தலில் கருத்து கணிப்புகள் கூறியதை போல் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து பாஜக வெற்றி பெறும் என்ற ஒரு தோற்றம் உருவானது.

    Congress and JDS going to meet Governor today

    எனினும் திடீரென டுவிஸ்ட் ஏற்பட்டது. இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து சோனியா காந்தி, தேவகௌடாவிடம் ஆதரவு கோரி போனில் ஆலோசனை செய்தார்.

    அப்போது காங்கிரஸ் ஆதரித்தால் குமாரசாமிதான் முதல்வர் என்று கூறினார். சோனியாவின் இந்த ஆஃபரை தேவ கௌடா ஏற்றுக் கொண்டார். இதையடுத்து தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

    இதன்பிறகு, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் இணைந்து ஆளுநர் வஜுபாய் ருடாபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக இருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

    இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தார், அவருடன் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் சென்றிருந்தார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஆதரவு தெரிவித்துள்ள கடிதத்தை காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

    English summary
    Congress and JDS going to meet Governor today, after Deve Gowda accpets offer given by Sonia Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X