For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால்..நீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய காங் திட்டம்

எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று போனால் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய காங்கிரஸ்- ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவிற்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் : எடியூரப்பா நம்பிக்கை- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு தோற்று போனால் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய காங்கிரஸ்- ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.

    கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளுநரின் அழைப்பின் பேரில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவுள்ளது.

    Congress- JDS plans to submit their affidavits to court

    இந்நிலையில் காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாக பாஜக மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு தோற்று போனால் அடுத்து என்ன செய்யலாம் என்ற வேலைகளில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் இறங்கியுள்ளது.

    ஒரு வேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று போனால் உச்சநீதிமன்றத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    அந்த பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்திட்ட 116 எம்எல்ஏக்களும் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், எச் டி குமாரசாமி முதல்வராக பதவியேற்க விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Cong-jds took affidavits from mlas supporting the alliance, planning to submit to court if required. Today trust vote occurs in Karnataka Assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X