For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவையே திருப்பி தாக்கும் காவி அஸ்திரம்.. காங்கிரசுக்கு ஆதரவாக திரண்ட 7000 சாமியார்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவிற்கு எதிராக திரண்ட 7000 சாமியார்கள்!- வீடியோ

    போபால்: மத்திய பிரதேச மாநிலம், போபால் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங்கிற்கு, ஆயிரக்கணக்கான இந்து சாமியார்களே கடும் எதிர்ப்பை தெரிவித்து களமிறங்கியுள்ளது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேச தலைநகர் போபால் லோக்சபா தொகுதி தற்போது விஐபி அந்தஸ்து பெற்றுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அந்த தொகுதியில் களமிறங்கியுள்ள நிலையில், பாஜக சார்பில் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிடுகிறார்.

    Congress leader Digvijaya Singh performs pooja in the presence of Computer Baba

    இதன் காரணமாக போபால் தொகுதியில், பிரச்சார அனல் பறக்கிறது. இந்துத்துவாவை முன்னிறுத்தி, சாத்வி பிரக்யா பிரசாரங்களை நடத்தி வரும் நிலையில், அதற்கு இந்து சாமியார்களே கடும் பதிலடி கொடுத்துள்ளனர். இதில் முன்னணியில் இருப்பவர் கம்ப்யூட்டர் பாபா.

    பாஜகவின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்த கம்ப்யூட்டர் பாபா ஏன், சாத்வி பிரக்யா சிங்கை கடுமையாக எதிர்க்கிறார் என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

    காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்தான் இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதை விரும்புகிறார் கம்ப்யூட்டர் பாபா. இதுபற்றி அவர் கூறுகையில், நர்மதாவின் நிஜமான பக்தர் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங் தான் என்று அழுத்தமாக தெரிவிக்கிறார்.

    நானும் சரி, பிற சாமியார்களும் சரி, நர்மதாவுக்கு பூஜை செய்வோமே தவிர, ஜெயில் யாத்திரை நடத்துவது கிடையாது. பிரக்யா சிங், ஒரு சாமியார் என்று அழைக்க தகுதி இல்லாதவர். குண்டுவெடிப்பு, கொலை போன்றவற்றில் தொடர்பு உள்ளவர். வீர மரணம் அடைந்த ஹேமந்த் கர்கரே குறித்து, மோசமான கருத்து தெரிவித்தவராகும்.

    ராமர் கோயில் கட்டப்படவில்லையேல், மோடி அரசாங்கமும் இல்லை. இவ்வாறு, காட்டமாக கருத்து தெரிவித்தார் கம்ப்யூட்டர் பாபா. நர்மதா நதியை வழிபட உரிய வசதி ஏற்படுத்தி கொடுத்தவர் திங் விஜய் சிங் என்பதுதான், இந்த சாமியார்களின் திக்விஜய் சிங் ஆதரவுக்கு காரணமாம். வெறும் ஆதரவோடு விடவில்லை சாமியார்கள்.

    திப்பு சுல்தானை இம்ரான் கான் புகழ... சசி தரூர் அதை பாராட்ட... கடுகடுப்பில் பாஜக திப்பு சுல்தானை இம்ரான் கான் புகழ... சசி தரூர் அதை பாராட்ட... கடுகடுப்பில் பாஜக

    ஹட் யோகம் என்ற ஒரு வழிபாட்டை, இன்று கம்ப்யூட்டர் பாபாவுடன் சேர்ந்து சுமார் 7 ஆயிரம் இந்து துறவிகள் நடத்தினர். திக்விஜய் சிங்கும் இதில் பங்கேற்றார். இந்த கூட்டு, யோகம், திக்விஜய்சிங் வெற்றிக்காக நடத்தப்பட்டுள்ளது. நெருப்பை மூட்டி நடுவே அமரும் வகையிலான கடுமையான யோகம் இதுவாகும்.

    காவி உடை தரித்த பிரக்யா சிங் தாக்கூரை கொண்டு, இந்துக்கள் வாக்குகளை கவர பாஜக நினைத்தால், அதே காவி உடையுடன், பல ஆயிரம், சாமியார்கள் அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளனர். இது போபால் தொகுதியில், பாஜகவிற்கு, பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    English summary
    Bhopal: Congress leader Digvijaya Singh performs 'pooja' in the presence of Computer Baba, at the venue where he is camping along with thousands of sadhus to undertake Hat Yog.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X