For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுல் நல்லாதான் வேலை செஞ்சாரு.... மாநில தலைமைதான் சரியில்லை - அமைச்சர் டி.கே. சிவக்குமார்

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு மாநில தலைமையே காரணம் என அம்மாநில அமைச்சர் டி.கே. சிவக்குமார் புகார் கூறியிருக்கிறார்

By Gopinath
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற காரணம்- வீடியோ

    பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தோல்விக்கு மாநில தலைமையே காரணம் என அம்மாநில அமைச்சர் டி.கே. சிவக்குமார் புகார் கூறியிருக்கிறார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

    அங்கு ஆட்சி அமைக்க 112 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் போதுமானது. பாஜக தற்போது 110 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனால் பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

    Congress leader DK Shivakumar concedes defeat

    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மாநில தலைமையே காரணம் என்றும் மத்திய தலைமை அல்ல எனவும் கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவக்குமார், தனது கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சிவக்குமார், "காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு நான் யாரையும் குற்றம் சாட்டவிரும்பவில்லை. 100 தொகுதிகளுக்கும் மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம், ஆனால், மிகவும் பரிதாபமான தோல்வியே மிஞ்சியுள்ளது என்றார்.

    ராகுல் காந்தி பல நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்த நிலையில், அதை வாக்குகளாக மாற்ற மாநில தலைமையும், நிர்வாகிகளும் தவறிவிட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

    ஒக்கலிக சமூக தலைவர்களில் ஒருவரான அமைச்சர் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் நாராயண கவுடாவிடம் தோல்வியுறும் நிலையில் உள்ளார்.

    English summary
    Congress leader DK Shivakumar concedes defeat, says Rahul Gandhi did his best
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X