For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் ஸ்டார் வார்ஸ் படம் பார்த்த ராகுல் காந்தி!

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் ஸ்டார் வார்ஸ் படம் பார்க்க சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், திரையரங்கிற்கு ஸ்டார் வார்ஸ் திரைப்படம் பார்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றது விவாத பொருளாகி இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.,விற்கு நெருக்கடி கொடுத்தாலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அதேபோல, தன் வசம் இருந்த இமாச்சல் பிரதேச மாநிலத்திலும் பா.ஜ.க.,விடம் தோல்வியடைந்தது காங்கிரஸ் கட்சி.

Congress Leader Rahul Gandhi watched Star Wars movie on Gujarat Election Results Day

இரண்டு மாநில தேர்தல்களிலும் வெற்றியடைந்த பா.ஜ.க இதை உற்சாகமாக கொண்டாடிக்கொண்டிருந்தது. மாலையில் பா.ஜ.க தலைமையகத்தில் பிரதமர் மோடி தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து தொண்டர்களுக்கு உரையாற்றிகொண்டு இருந்தார். இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ?

இரண்டு மாநில தேர்தல்களில் தோல்வியடைந்து இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தனது நண்பர்களுடன் டெல்லி பி.வி.ஆர் சாணக்கியா திரையரங்களில் தனது நண்பர்களுடன் ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை பார்த்து உள்ளார். இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி சமீபத்தில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதனால் அவரது இந்த நடவடிக்கையை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் பலர் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

English summary
Congress Leader Rahul Gandhi watched Star Wars movie on Gujarat Results Day. Tweets about Rahul Gandhi and his behavior Trolled over social media and many of them also supports Rahul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X