For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்பால் தேர்வு கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்.. பிரதமருக்கு கார்கே பரபரப்பு கடிதம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: லோக்பால் தேர்வுக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் லோக்சபா குழு தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே மறுத்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

லோக்பால் தேர்வுக் கமிட்டியின் மூலம் லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. அந்த குழு பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர், லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைவரது ஊழல்களையும் கண்காணிக்க முடியும். அதற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பிரதமர் சார்பில், மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்பட்டிருந்தார்.

Congress' Mallikarjun Kharge refuses to attend Lokpal meet as 'Special invitee', writes to PM Modi

ஆனால், அழைப்பில், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என குறிப்பிடாமல், சிறப்பு அழைப்பாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டிய அளவுக்கான உறுப்பினர்களை பெற முடியவில்லை என்பதால், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை கார்கே பெறவில்லை.

இதை குறிப்பிட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்த கார்கே, பிரதமருக்கு பதிலுக்கு கடிதம் எழுதி தன்னால் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாது என கூறியுள்ளார். சம்பிரதாயத்திற்காக தன்னை அழைத்துள்ளதால் கூட்டத்தில் ஆக்கப்பூர்வ கருத்துக்களை எடுத்து வைக்க முடியாது என்று உணருவதாகவும், எனவே அதில் பங்கேற்கவில்லை என்றும் கார்கே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Congress' Mallikarjun Kharge refuses to attend Lokpal meet as 'Special invitee', writes to PM Modi

பங்கேற்பாளராக இல்லாமல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதில் பலன் இல்லை என்றும் கார்கே கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் நேரில் சென்று ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

English summary
An infuriated Mallikarjun Kharge, leader of Congress in Lok Sabha, in a letter to the Prime Minister Narendra Modi, declined the invitation to attend the Lokpal Meeting after being addressed as a 'special invitee'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X