For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடியூரப்பா மகன் பேரம் பேசியதாக காங். வெளியிட்ட ஆடியோ போலி.. காங். எம்எல்ஏ பரபரப்பு தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவிக்கு போன் செய்து ரூ. 15 கோடிக்கு பேரம் பேசிய எடியூரப்பா மகன்-வீடியோ

    பெங்களூர்: காங். எம்எல்ஏக்களிடம் பாஜக தலைவர்கள் பேரம் பேசியதாக வெளியான ஆடியோ போலியா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, அக்கட்சி எம்எல்ஏ ஒருவர் தனது பேஸ்புக்கில் கூறியுள்ள தகவல்.

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்தார் எடியூரப்பா. முன்னதாக காங்கிரஸ் சார்பில் பல்வேறு ஆடியோ டேப்கள் வெளியிடப்பட்டன. அதில், பாஜக தலைவர்கள் எடியூரப்பா, ஸ்ரீராமலு, முரளிதரராவ், எடியூரப்பா மகன் விஜயேந்திரா உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பணம் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தியதை போன்ற ஆடியோக்கள் இருந்தன.

    Congress MLA Shivaram Hebbar dismisses bribe tape framing BJP as ‘fake’

    அதில் குறிப்பாக, எடியூரப்பா மகன் விஜயேந்திரா, எல்லாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சிவராம் ஹெப்பார், மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணம், பதவி தருவதாக ஆசைகாட்டி பாஜகவுக்கு வாக்களிக்க கோரிக்கைவிடுத்ததாக கூறப்பட்டது. காங்கிரஸ் மேலவை உறுப்பினர் உக்ரப்பா இந்த ஆடியோவை வெளியிட்டிருந்தார்.

    இந்த நிலையில், இந்த உரையாடல் போலியானது என்று சிவராம் ஹெப்பார், தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஆடியோவில் பேசுவது தனது மனைவி குரல் இல்லை என அவர் கூறியுள்ளார். இது கர்நாடக காங்கிரஸ் கட்சி மீது விமர்சன கணைகள் தொடுக்க காரணமாக அமைந்துள்ளது.
    இருப்பினும், இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு இல்லை என அக்கட்சி மூத்த தலைவர் ஹரிபிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

    English summary
    In a major embarrassment for the Congress party, one of its own MLAs, Shivaram Hebbar, has diffused the “bribe bomb” the party hurled at the BJP ahead of the Floor Test in Karnataka Assembly on Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X