For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகத்தில் இன்று கிளைமாக்ஸ்... ஹைதராபாத்திலிருந்து பெங்களூர் வந்தனர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

கர்நாடகத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால் ஹைதராபாத்திலிருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு வந்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவிற்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் : எடியூரப்பா நம்பிக்கை- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால் அதில் கலந்து கொள்ள ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

    கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் மஜத இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

    Congress MLAs arrives to Hyderabad

    இதனிடையே 104 தொகுதிகளை கைப்பற்றிய பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததையடுத்து கடந்த வியாழக்கிழமை முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பாஜகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 7 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர்.

    இதற்காக அவர்களை குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து பெங்களூரில் உள்ள ஈகிள்டன் ரிசார்டில் தங்கவைக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    v

    இந்நிலையில் கர்நாடக சட்டசபையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால் காங்க எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

    ஹைதராபாத்தில் இருந்து வந்த எம்எல்ஏக்கள் பெங்களூர் ஹில்டன் ஹோட்டலில் தங்கியுள்ளனர். இன்று பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டு மாலை வாக்கெடுப்பில் பங்கேற்கவுள்ளனர்.

    English summary
    Congress MLAs arrive from Hyderabad to Bangalore as the Karnataka assembly faces floor test.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X