For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ்- தேசியவாத காங். இணைந்து போட்டி - சரத்பவார்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது.

Congress, NCP to fight Maharashtra Assembly polls together: Sharad Pawar

இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை புதன்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மகிழ்ச்சிதரத்தக்கதாக இருந்ததாக சரத்பவார் கூறியுள்ளார்.

இதனிடையே மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியினரோ, இரு கட்சிகளும் சரிபாதி தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சரத்பவாரோ, சோனியாவுடனான சந்திப்பு என்பது முதல்கட்ட பேச்சுவார்த்தைதான்..பின்னர் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

English summary
Congress president Sonia Gandhi and NCP chief Sharad Pawar have pledged to contest the Maharashtra assembly elections together, melting the first in the relationship that built up between the partners after state leaders of both parties failed to arrive at an amicable seat-sharing formula.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X