For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்பவன் முன் குவிந்த காங்- மஜத எம்எல்ஏக்கள்.. ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி தொண்டர்கள் போராட்டம்

கர்நாடகத்தில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து முறையிட சென்றுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கூவத்தூர் ஸ்டைலில் ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் எம்எல்ஏக்கள்.

    பெங்களூர்: கர்நாடகத்தில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து முறையிட சென்றுள்ளனர். ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. அதுபோல் பாஜகவும் அதிக இடங்களை காரணம் காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

    Congress plans to parade MLAs before Governor

    இன்னும் 7 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜுபாய் வாலா பாஜகவுக்கு அவகாசம் அளித்துள்ளார். இதனிடையே பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் சென்றுள்ளனர். அங்கு இரு கட்சியினரும் தங்களது பலத்தை நிரூபிக்க ஊர்வலமாக செல்ல முடிவு செய்து அனுமதி கேட்டனர்.

    ஆனால் இவர்களது கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார். இரு கட்சிகளைச் சேர்ந்த 10 பேருக்கு மட்டுமே ஆளுநரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கக் கோரி ஆளுநர் மாளிகை முன்பு தொண்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் ஆளுநர் மாளிகைப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    English summary
    Congress plans to parade mlas before governor, if not invited to form govt, they are planning dharna before raj bhavan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X