For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவ்வளவு மிருகத்தனமாவா ஒரு குழந்தையை கொல்றது? கொலையாளிகள் தப்பவே கூடாது.. கொந்தளித்த ராகுல்!

Google Oneindia Tamil News

அலிகார்: உத்தரப்பிரதேசத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ளது டப்பல் என்ற நகரம். இந்த பகுதியை சேர்ந்த தம்பதி அதே பகுதியை சேர்ந்த ஜாகீத் என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

இதனை திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில் ஜாகீத்தும் அவரது உறவினர் அஸ்லாமும் அந்த தம்பதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த தம்பதியின் இரண்டரை வயது பெண் குழந்தையை கடத்திய அவர்கள் அந்த குழந்தையை கொடூரமாக கொன்றுள்ளனர்.

ரூ.10000 கடனை திருப்பிகொடுக்காத அப்பா.. இரண்டரை வயது மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய கொடூரர்கள்! ரூ.10000 கடனை திருப்பிகொடுக்காத அப்பா.. இரண்டரை வயது மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய கொடூரர்கள்!

குப்பையில் வீசப்பட்ட உடல்

குப்பையில் வீசப்பட்ட உடல்

மேலும் முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்ததோடு உடலையும் துண்டு துண்டாக வெட்டி மூட்டையாக கட்டி குப்பையில் வீசியுள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் ஜாகீத் மற்றும் அஸ்லாமை கைது செய்துள்ளனர்.

கொடூர கொலை - பதற்றம்

கொடூர கொலை - பதற்றம்

குழந்தையின் பிரேத பரிசோதனையில் குழந்தை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் உடல்பாகங்கள் துண்டாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிர்வலை

நாடு முழுவதும் அதிர்வலை

சமூகவலைதளங்களிலும் ஜஸ்டிஸ் ஃபார் டிவிங்கிள் ஷர்மா என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகியுள்ளது. 10000 ரூபாய் பணத்திற்கு இரண்டரை வயது குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நிலைகுலைந்து அதிர்ச்சியடைகிறேன்

நிலைகுலைந்து அதிர்ச்சியடைகிறேன்

இந்நிலையில் சிறுமியின் கொலைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், உத்தரப்பிரதேசத்தின் அலிகாரில் நடந்த சிறுமியின் கொடூர கொலையால் நிலைகுலைந்து அதிர்ச்சியடைகிறேன்.

குற்றவாளிகள் தப்பவே கூடாது

எப்படி ஒரு மனிதனால் ஒரு குழந்தையிடம் இவ்வளவு மிருகத்தனமாக நடந்துகொள்ள முடியும்? இந்த கொடூர குற்றம் தண்டிக்கப்படாமல் போயிவிடக்கூடாது. உத்தரப்பிரதேச போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Congress President Rahul Gandhi condemns for the UP girl child murder. Rahul demanding swiftly action by UP police in the murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X