For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எலிசெபத் மகாராணியைவிட சோனியா கோடீஸ்வர அரசியல் தலைவரா? மறுக்கிறது காங்கிரஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Congress rejects report ranking Sonia Gandhi richer than Queen Elizabeth
டெல்லி: இங்கிலாந்தின் எலிசெபத் மகாராணியைவிட சோனியா காந்தி கோடீஸ்வரர் என்று வெளியான தகவல்களை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது.

Huffington Post ஊடகமானது உலகில் டாப் 20 கோடீஸ்வர அரசியல்தலைவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் முதலிடத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடம்பெற்றிருந்தார். இப்பட்டியலில் பலநாட்டு அதிபர்கள், மன்னர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதில் எந்த ஒரு அரசு பொறுப்பும் வகிக்காத காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 12வது இடம் பிடித்திருந்தார் .சோனியாவின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் சுமார் 12 ஆயிரம் கோடியைத் தாண்டும். இது இங்கிலாந்தின் எலிசெபத் மகாராணியின் சொத்து மதிப்பைவிட அதிகமாம்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தியை காங்கிரஸ் கட்சி முழுமையாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, நகைப்புக்குரியதாக இருக்கிறது இச்செய்தி. இதுபோன்ற அவதூறுகளை பரப்புவதைவிட வேறு நல்ல வேலையை செய்யலாம் என்று சாடியுள்ளார்.

English summary
The Congress on Monday rejected a report that its president Sonia Gandhi was the 12th richest world leader, ahead of Queen Elizabeth of Britain and Amir of Kuwait Sheikh Sabah Al-Ahmad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X