For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் மனைவியிடம் பாஜகவினர் யாரும் பேசவில்லை.. எம்எல்ஏ மறுப்பால் தர்மசங்கடத்தில் கர்நாடக காங்கிரஸ்!

பாஜக குதிரை பேர ஆடியோ போலியானது என கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: பாஜக குதிரை பேர ஆடியோ போலியானது என கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா கடந்த 17ஆம் தேதி பதவியேற்றார். வெறும் 104 எம்எல்ஏக்களுடன் அவர் பதவியேற்றதால் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்களிடம் பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என கூறப்பட்டது.

இதையடுத்த எம்எல்ஏக்கள் விலை போகாமல் இருப்பதற்காக கர்நாடக காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மைசூர் மற்றும ஹைதராபாத் ரிசார்ட்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

4 ஆடியோக்கள் வெளியீடு

4 ஆடியோக்கள் வெளியீடு

இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பாஜக வாங்க முயற்சி செய்ததாக அக்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வரிசையாக 4 ஆடியோக்களையும் வெளியிட்டது.

எம்எல்ஏ மனைவி

எம்எல்ஏ மனைவி

காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு பாஜக எம்எல்ஏ விஜயேந்திரா ரூ.15 கோடி பேரம் பேசியதாக புகார் எழுந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏவின் மனைவிக்கு பாஜக எம்எல்ஏ போன் செய்து எடியூரப்பாவுக்கு வாக்களிக்க சொன்னதாக புகார் அளிக்கப்பட்டது. ரூ.15 கோடி அல்லது அமைச்சர் பதவி தருவதாக பாஜக எம்எல்ஏ கூறியதாக இருந்தது அந்த ஆடியோ.

எடியூரப்பா ஆடியோ

எடியூரப்பா ஆடியோ

இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ வெளியானது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.சி. பாட்டீலிடம் எடியூரப்பா செல்போனில் பேசிய ஆடியோ வெளியிடப்பட்டது. தங்கள் பக்கம் வந்தால் அமைச்சர் பதவி அளிக்கப்படும் என எடியூரப்பா உறுதி அளிப்பதாக இருந்தது அந்த ஆடியோ.

ஸ்ரீராமலு ஆடியோ

ஸ்ரீராமலு ஆடியோ

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி.பாட்டீலிடம் ஸ்ரீராமலு மற்றும் முரளிதரராவ் போனில் பேசி பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் ஆடியோவை ரிலீஸ் செய்யப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வீடியோக்களை வெளியிட்டபோதும் அதனை பாஜகவினர் மறுத்து வந்தனர்.

காங்கிரஸ் எம்எல்ஏ மறுப்பு

காங்கிரஸ் எம்எல்ஏ மறுப்பு

இந்நிலையில் எல்லாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சிவராம் ஹெப்பூரின் மனைவியிடம் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, எடியூரப்பாவின் ஆதரவாளர் புட்டசாமி ஆகியோர் தனித்தனியாக செல்போனில் தொடர்பு கொண்டு குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆடியோ போலியானது சிவராம் ஹெப்பூர் தெரிவித்துள்ளார்.

எனது மனைவியின் குரல் அல்ல

எனது மனைவியின் குரல் அல்ல

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவராம் ஹெப்பூர் தனது ‘முகநூல்‘ பக்கத்தில் தனது மனைவியுடன் பா.ஜனதா தலைவர்கள் பேசியதாக வெளியான ஆடியோவை பற்றி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், குதிரை பேர ஆடியோவில் வெளியான செல்போன் உரையாடலில் இருப்பது எனது மனைவியின் குரல் அல்ல.

நானே கண்டிக்கிறேன்

நானே கண்டிக்கிறேன்

எனது மனைவி எந்த வித செல்போன் அழைப்பையும் ஏற்று பேசவில்லை. பா.ஜ.கவினர் எனது மனைவியுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வெளியான ஆடியோ போலியானது. இதனை நான் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். சிவராம் ஹெப்பூரின் மறுப்பால் காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.

English summary
Congress released BJP bargain audio is fake says Congress MLA Sivaram heppur. Congress released audio that BJP MLA and Yeddyurappa son Vijayenthira taking to Sivaram hepur wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X