For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்....." மூத்த காங். தலைவர் திக்விஜய்சிங் கருத்தால் புது சர்ச்சை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரை இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.

காஷ்மீரில் கடந்த மாதம் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு ஒரு மாதத்துக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதுவரை 66 பேர் பலியாகி உள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து தலையிட்டு வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங், காஷ்மீரை இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையாகிஉள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய்சிங், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பிரதமர் மோடி கவலையடைந்து உள்ளார். அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார், நன்றி கூறுகிறார். பலுசிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

ஆனால் இந்தியாவில் உள்ள காஷ்மீரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் தயாராக இல்லை. இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நாம் நம்பிக்கையை உருவாக்கவேண்டும் என்றால் பேச்சுவார்த்தையின் வாயிலாகவே அது சாத்தியமாகும் என்றார்.

பின்னர் திக்விஜய் சிங்கிடம் அவருடைய "இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்" கருத்து குறித்து செய்தியார்கள் கேள்விகளை எழுப்பிய போது, "அப்படி இல்லை, காஷ்மீர் இந்தியாவில் உள்ளது என்பதையே குறிப்பிட வந்தேன்... காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்றார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதிதான்... பிரச்சனை என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் இருக்கிறது என்றார்.

English summary
The Congress party's Digvijaya Singh today added to his long list of gaffes by referring to Pakistan-Occupied- Kashmir (PoK) as India-Occupied-Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X