For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகாவில் புயலை கிளப்பிய எடியூரப்பா ஆடியோ- ஆட்சியை கலைக்க காங். வலியுறுத்தல்!

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கவிழ்க்கப்பட்டதன் பின்னணியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இருப்பதாக முதல்வர் எடியூரப்பா பேசும் வீடியோவால் கர்நாடகாவில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து கர்நாட்காவில் ஆளும் பாஜக அரசை கலைக்க வேண்டும் என ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்..

கர்நாடகவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக 17 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.

Congress seeks to dismissal of Karnataka BJP govt

இதையடுத்து கர்நாடகாவில் பாஜக அரசு முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைந்தது. இந்நிலையில் 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தின் பின்னணியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு தொடர்பிருப்பதாக அக்கட்சி தொண்டர்களிடையே எடியூரப்பா பேசிய வீடியோ வைரலானது.

அது கர்நாடகா அரசியல் களத்தில் மறுபடியும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

முதல்வராக ஆசையா? நீங்க சின்ன பையன் பாஸ்.. ஆதித்யா தாக்கரேவை கலாய்க்கும் பாஜக அமைச்சர்!முதல்வராக ஆசையா? நீங்க சின்ன பையன் பாஸ்.. ஆதித்யா தாக்கரேவை கலாய்க்கும் பாஜக அமைச்சர்!

தற்போது எடியூரப்பா ஆடியோவை முன்வைத்து ஒரு வழக்கு தொடர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், எடியூரப்பா பேசிய ஆடியோவை டிவி சேனல்கள் ஒளிபரப்பி உள்ளன. அவரது பேச்சு அப்பட்டமான அரசியல் சாசன விரோத நடவடிக்கையை உறுதி செய்கிறது. எம்.எல்.ஏக்களை மும்பையில் தங்க வைத்ததும் ஆட்சியை கவிழ்த்ததும் அமித்ஷாதான் என நாங்கள் சொல்லவில்லை.

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாதான் சொல்லியிருக்கிறார் என்றார். முன்னதாக ஆளுநர் வஜூபாய் வாலாவை சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் அடங்கிய குழு நேரில் சந்தித்து எடியூரப்பார் அரசை கவிழ்க்க வேண்டும் என வலியுறுத்தி மனு ஒன்றையும் அளித்தனர்.

English summary
Former chief minister Siddaramaiah and state Congress President Dinesh Gundu Rao met Governor Vajubhai Vala and submitted a memorundam to dismissal of Karnataka BJP Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X