For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்க 'கே'..வா...? ராம்தேவுக்கு காங்கிரஸ் அவதூறு நோட்டீஸ்

By Mathi
Google Oneindia Tamil News

 Baba Ramdev
போபால்: தமது கட்சியினரை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்தால் யோகா குரு ராம்தேவுக்கு மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர்.

அப்போது கருத்து தெரிவித்த யோகா குரு ராம்தேவ், ஓரினச்சேர்க்கையை காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் ஆதரிக்கின்றனர். அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பொதுச்செயலர் பிரமோத் குமார், ராம்தேவுக்கு அவதூறு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தாம் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் ராம்தேவ் மன்னிபுக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

English summary
Madhya Pradesh Congress Committee's Legal and Human Rights Department's General Secretary Pramod Kumar Dwivedi sent a defamation notice on Thursday to yoga guru Ramdev for his controversial remarks against fellow party workers on the issue of homosexuality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X