For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்ணின் கையைப்பிடித்து கை சின்னத்தில் ஓட்டு போட்ட காங்கிரஸ்.. வீடியோ வெளியிட்ட ஸ்மிருதி இரானி!

Google Oneindia Tamil News

அமேதி : எங்களுக்குதான் ஓட்டு போட் வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் பெண் ஒருவரின் கையை பிடித்து ஓட்டு போட வைத்தது தொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் இன்று 5வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியும் அடங்கும்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அமேதி தொகுதி வாக்குப்பதிவு குறித்து ஸ்மிருதி இரானி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒட்டுக்காக ஒருவரை மரணப்படுக்கைக்கு தள்ளிவிட்டார் ராகுல் காந்தி... ஸ்மிருதி இராணி ஆவேசம்ஒட்டுக்காக ஒருவரை மரணப்படுக்கைக்கு தள்ளிவிட்டார் ராகுல் காந்தி... ஸ்மிருதி இராணி ஆவேசம்

காங்கிரஸ் சின்னத்தில் ஓட்டு

காங்கிரஸ் சின்னத்தில் ஓட்டு

அதில் பெண் ஒருவர், தான் பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க விரும்பியதாகவும் ஆனால் காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து தனது கை விரலால் காங்கிரஸ் கட்சிக்கான சின்னத்தின் பட்டனை அழுத்தி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதரிக்கிறாரா ராகுல்?

ஆதரிக்கிறாரா ராகுல்?

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ஸ்மிருதி இரானி காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதை ராகுல் காந்தி ஆதரிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் தீர்மானிக்க வேண்டும்

மக்கள் தீர்மானிக்க வேண்டும்

தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ராகுல்காந்தியின் இதுபோன்ற அரசியல் தண்டிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் ஸ்மிருதி

அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு இதே அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வியடைந்தார். இந்நிலையில் அதே தொகுதியில் ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை எதிர்த்து மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress workers forced a lady to vote for congress. Union Minister Smriti irani posted video of this incident in her Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X