For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளில் எந்த கட்சிக்கு அதிக செல்வாக்கு? பரபர சர்வே முடிவுகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் மீண்டும் காங். ஆட்சி.. வெளியானது பரபரப்பு சர்வே..வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரப்போகிறது என்று சி-ஃபோர் அமைப்பு நடத்திய சர்வே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநிலத்தின், எந்தெந்த பகுதிகளில், எந்த கட்சி அதிகம் வெற்றிபெறப் போகிறது என்ற கணிப்பையும் அது வெளியிட்டுள்ளது.

    கர்நாடகாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 224 சட்டசபை தொகுதிகளை கொண்ட, கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சி-ஃபோர் அமைப்பு, இம்மாதம் 1ம் தேதி முதல், 25ம் தேதிவரை 154 தொகுதிகளில் சர்வே நடத்தியுள்ளது. இந்த சர்வேயில், 22,357 வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிடவும் கூடுதலாக 9 சதவீத வாக்குகளை ஈர்த்து மொத்தம் 46 சதவீத வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பாஜக 31 சதவீத வாக்குகளைத்தான் பெற முடியும் என்றும், ம.ஜ.த 16 சதவீத வாக்குகளை பெறும் என்றும் அந்த சர்வே கூறுகிறது.

    காங்கிரஸ் வெற்றி

    காங்கிரஸ் வெற்றி

    இதன்மூலம், காங்கிரஸ் 126 தொகுதிகளை வென்று அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்றும், பாஜக தற்போதுள்ள 43 எம்எல்ஏக்கள் என்ற நிலையில் இருந்து சற்று முன்னேறி 70 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், ம.ஜ.த 27 தொகுதிகளை வெல்லும் எனவும் அந்த சர்வே கணித்துள்ளது. இதனிடையே எந்தெந்த பிராந்தியங்களில் எந்த கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதையும் சர்வே கணித்துள்ளது.

    பெங்களூரில் யார்?

    பெங்களூரில் யார்?

    பெங்களூர் நகர பகுதியில் மொத்தம், 28 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில் 19 தொகுதிகளை காங்கிரஸ் அபாரமாக வெல்லப்போகிறது என்கிறது இந்த சர்வே. பாஜகவுக்கு 9 தொகுதிகள்தான் கிடைக்குமாம். பெங்களூரில் பல தொகுதிகளில் தமிழர்கள் வாக்குகள்தான் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். இதை கருத்தில் கொண்டே, பெங்களூரிலுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தமிழர்களிடம் நெருக்கமாக பழகக்கூடியவர்கள். தேர்தலில் பெருவாரியாக வாக்களிக்க கூடிய, அடித்தட்டு மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார்கள். ஆனால், பாஜக, ம.ஜ.த எம்எல்ஏக்கள் அப்படியில்லை. ஒரு சிலரை தவிர்த்து. இதுவும், காங்கிரசின் வெற்றி வாய்ப்புக்கு மற்றொரு காரணமாகும்.

    மைசூர் மண்டலம் அபாரம்

    மைசூர் மண்டலம் அபாரம்

    சித்தராமையாவின் சொந்த ஊர் அமைந்துள்ள மைசூர் மண்டலத்திலும் காங்கிரஸ் அமோகமாக வெற்றிபெற உள்ளதாம். அங்கு 33 தொகுதிகளில் காங்கிரசும், 7 தொகுதிகளில் பாஜகவும், தேவகவுடாவின் ஜாதி வாக்கு வங்கி அமைந்துள்ள அந்த பகுதியில், மதசார்பற்ற ஜனதாதளம் 24 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்றதாம்.

    மத்தியில் பரவாயில்லை

    மத்தியில் பரவாயில்லை

    மும்பை-கர்நாடகா என்று அழைக்கப்படும், வட மேற்கு மண்டலத்தில், உள்ள 50 தொகுதிகளில் காங்கிரஸ் 28 தொகுதிகளையும், பாஜக 22 தொகுதிகளையும் வெல்ல வாய்ப்புள்ளது. மத்திய கர்நாடக மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளில் பாஜக 13 தொகுதிகளையும், காங்கிரஸ் 9 தொகுதிகளையும் வெல்ல முடியுமாம். இந்த மண்டலத்தில்தான் எடியூரப்பாவின் சொந்த ஊரான ஷிமோகா அமைந்துள்ளது. அங்கே பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது.

    கடலோரத்தில் கடும் போட்டி

    கடலோரத்தில் கடும் போட்டி

    மதவன்முறைகளுக்கு பெயர் பெற்ற கடலோர மாவட்டங்களில், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்புள்ளது. இங்கே இரு கட்சிகளும் சமபலத்தோடு உள்ளன. ஹைதராபாத் பகுதியை ஒட்டியுள்ள வடகிழக்கு கர்நாடகா மிகவும் பின்தங்கிய பிராந்தியம். இங்கு, காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், பாஜக 10 மற்றும் ம.ஜ.த 3 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாம்.

    English summary
    A survey conducted in Karnataka shows the Congress bettering its tally in the upcoming assembly elections 2018. The pre-poll survey conducted between March 1 and 25 across 154 assembly constituencies states that the Congress would improve its vote share by 9 per cent and end up with 46 per cent of the vote share. The survey says that the Congress would win 19 out of the 28 assembly constituencies in Bengaluru while the BJP would bag nine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X